டில்லி:

ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டில்லியில் நடந்தது.

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, பல மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

இதில் 29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விபூதி, சர்க்கரை மிட்டாய், 20 லிட்டர் கேன் தண்ணீர் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது.

* பொழுது போக்கு பூங்கா கட்டணம் 28 சதவீதத்தில் இருந்து 18ஆக குறைப்பு.

* சொட்டுநீர்ப்பாசன கருவிகள், தண்ணீர் கேன், சர்க்கரை மிட்டாய் உள்ளிட்ட 29 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்க முடிவு.

* வரும் 25ம் தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும்

* 10 நாட்களுக்கு பிறகு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கானொலி காட்சி மூலம் நடைபெறும்.

* ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர தமிழகம் எதிர்ப்பு.