ஜார்கண்ட் மாநிலத்தில் 4 வயது சிறுமி கொடூர கொலை: கண்கள் பிடுங்கி, கைகள் நறுக்கிய நிலையில் உடல் மீட்பு

Must read

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் மாயமான 4 வயது சிறுமி கண்கள் பிடுங்கி, கைகளை நறுக்கி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமியை கடந்த 15ம் தேதி முதல் காணவில்லை. இந்த சிறுமி தற்போது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுமி கற்பழிக்கப்ப்டடு கொலை செய்யட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், சிறுமியில் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கைகளும் நறுக்கிய நிலையில் உள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானவுடன் தான், சிறுமியில் உடல் உறுப்புகள் எதுவும் திருடப்பட்டுள்ளதா? என்பது தெரியவரும்.

மர்ம கும்பல் சிறுமியை கற்பழித்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும், உடல் உறுப்பு திருடும் கும்பலுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.

கிராம மக்கள் கூறுகையில், நடந்துள்ள சம்பவத்தை பார்த்தால் மந்திரவாதிக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். அதனால் சிறுமி நரபலி கொடுக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிறுமியை அறிந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சதார் காவல் நிலைய எல்லலையில் கடந்த வாரம் இதேபோல் ஒரு 19 வயது பெண் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article