ரஜினி ஊழல் நடிகர்: சுப்பிரமணியசாமி எதிர்ப்பு

Must read

டெல்லி,

ஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் ஊழல் நடிகர் என்று பாரதியஜனதாவை சேர்ந்த பொர்க்கி புகழ் சுப்பிரமணியசாமி எம்பி கூறியுள்ளார்.

ரஜினி கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். ஏற்கனவே முதல்நாள் தனது ரசிகர்களுடன் பேசிய ரஜின் இன்றும் தனது ரசிகர்களுடன் பேசினார்.

ரஜினியை பாரதிய ஜனதா கட்சியினர் தங்களது கட்சிக்கு இழுக்க முயற்சித்து வரும் நிலையில், ரசிகர்களுடனான சந்திப்பின்போது பேசிய ரஜினி,

தன்னிடமிருந்து அரசியல் ஆதாயம் தேட சில அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார். தற்போது நாட்டில் லஞ்சம் ஊழல்தான் தலைவிரித்து ஆடுகிறது. நான் அரசியலுக்கு வந்தால் லஞ்சம், ஊழல் தவிர்ப்பேன் என்று தனது அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசினர்.

ரஜினியின் கருத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பலர் இது அவரது அடுத்த பட வெளியீட்டிற்கான ஸ்டண்டு என்று கூறி வருகின்றனர். ஆனால், அரசியல் கட்சியினர் அவரது கருத்தை எதிர்த்தும் வரவேற்றும் கூறி வருகின்றனர்.

 

இதற்கிடையில், தனியார் டிவி சேனல் ஒன்றிருக்கு பேட்டியளித்து பொர்க்கி புகழ் சுப்பிரமணிய சாமி கூறியிருப்பதாவது

ரஜினி ஒரு ஊழல் நடிகர் என்றும், அரசியலுக்கு வரக்கூடாது, ரஜினிக்கு அரசியல் பற்றிய அறிவு கிடையாது என்றும், முதல்வராக தகுதியில்லை என்றும், ரஜினி தமிழர் இல்லை என நான் ஒருபோதும் கூறியதில்லை, மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ரஜினி என திமுகதான் பிரச்சினை கிளப்பியது  சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசும்போது, நாட்டில் ஜனநாயக சிஸ்டம் சரியில்லை. அதை சரிப்படுத்த வேண்டும் என்றும், போர் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், போருக்கு ரெடியாக இருக்கும்படி தனது ரசிகர்களிடம் பேசி உள்ளார்.

ரஜினியின் பேச்சு குறித்தும், சுப்பிரமணியன்சாமியின் கருத்து குறித்தும் பதில் சொல்ல தமிழக பாரதியஜனதா கட்சியினர் முன்வரவில்லை.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

More articles

Latest article