15ந்தேதி முதல் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி! திட்டமிட்டபடி நடைபெறுமா?

Must read

சென்னை,

ந்த மாதம்  வரும் 15ந் தேதி முதல் 19-ஆம் தேதி வரை  ரசிகர்களைச் சந்தித்து பேசுகிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இந்த சந்திப்பாவது திட்டமிட்டபடி நடைபெறுமா அல்லது எப்போதும்போல கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக   தனது பிறந்த நாளில் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து சந்திப்பது வழக்கம். ஆனால், கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பின்னர் ரசிகர்களுடன் எந்தவித சந்திப்பும் நடைபெறவில்லை.

பிறந்த நாட்களில் ரசிகர்களின் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளி நாட்டுக்கோ சென்றுவிடுவார்..

இதற்கிடையில், கடந்த பிப்ரவரி 2ந்தேதி ரசிகர்மன்ற நிர்வாகிகளை திடீரென சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து பல  ஆண்டுகளுக்குப் பின் தனது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் ரசிகர்களை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  பின்னர் தேதி மாற்றப்பட்டது. இறுதியில் ரசிகர்களுடனான சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

இந்நிலையில் வரும் 15ந் தேதி ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல் கட்டமாக 5 நாள்கள் நடைபெற இருக்கும் இந்த  சந்திப்பு 19-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்திப்பதாகவும்,  தேர்வு செய்யப்பட்ட ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக அவர் புகைப்படம் எடுத்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த முறையாவது திட்டமிட்டபடி சந்திப்பு நடைபெறுமா என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article