நள்ளிரவில் விஜய்க்கு ஆதரவு அளித்த ரஜினி

சென்னை

ர்கார் திரைப்பட சர்ச்சையில் நேற்று இரவு அப்படத்துக்கு ஆதரவு அளித்து ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிந்துள்ளார்.

விஜய் கதாநாயகனாக நடித்த சர்கார் திரைப்படத்தில் பல சர்ச்சைக்குரிய காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் கலவரத்துக்கு அஞ்சி திரையரங்கு உரிமையாளர்கள் இந்த படத்தை திரையிடுவதை நிறுத்தி உள்ளனர்.

அதே நேரத்தில் தமிழ்த் திரையுலகின் இரு பெரும் நடிகர்களான கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இந்த படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று இந்த படத்தை ஆதரித்து கமலஹாசன் டிவிட்டரில் பதிந்திருந்தார். அதை ஒட்டி நேற்று நள்ளிரவு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் தனது பதிவில், “தணிக்கைக் குழு தணிகை செய்து படத்தை வெளியிட்ட பிறகு அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துவது, திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rajinikanth is supporting vijay's film SARKAR
-=-