கொழும்பு,
மீண்டும் ராஜபக்சேவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் மக்கள், அவரை அடித்து கொலை செய்திருப்பர் என்று தற்போதைய நிதி அமைச்சர் விஜயதாச கூறினார்.
ஸ்ரீலங்காவின் தற்போதைய நிதி நிலவரம் குறித்து பேசிய நிதி அமைச்சர் விஜயதாச, இன்னும் இரண்டு வருடங்கள் ராஜபக்சே ஆட்சி நீடித்திருந்தால் மக்கள்  அவரை அடித்தே கொன்றிருப்பார்கள்.

நிதிஅமைச்சர் விஜயதாச
நிதிஅமைச்சர் விஜயதாச

அவரால் வீதிக்கு இறங்க முடியாமல் போயிருக்கும். அதற்குப் பயந்துதான் இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும் போதே அவர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார்  என அதிர்ச்சி தகவல்களை கூறினார்.
மேலும், மகிந்த ராஜபக்சே ஆட்சியில் பொருளாதாரம் படுமோசமாக வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அந்த நிலைமையில் ஆட்சி தொடர்ந்திருந்தால் அவரால் வீதிக்குக்கூட இறங்க முடியாமல் போயிருக்கும்.
அதற்குப் பயந்து கொண்டும் ஜெனிவாப் பிரச்சினைக்கு பயந்துகொண்டும்தான் மகிந்த இரண்டு வருடங்கள் மீதமிருக்கும் போது முன் கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார் என்றார்.
அதேபோல், வடக்கிலோ தெற்கிலோ இனவாதம் பேசினால் அவர் இனவாதிதான் என்பதில் சந்தேகமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் இனிமேல் ஸ்ரீலங்காவில் இனவாதத்துக்கு இடங்கொடுக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை நாம் இந்த நாட்டுக்கும் உலகுக்கும் வழங்கியுள்ளோம் என்றார்.
தெற்கில் உள்ள அரசியல்வாதிகள் பேசுகின்ற பேச்சை தமிழர்கள் கேட்டால் வடக்கில் இராணுவம் இருப்பது தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்குத்தான் என்று அவர்களுக்கு நினைக்கத் தோன்றும்.  அங்குள்ள பொலீசாரையும்  ராணுவத்தினரையும் இனவாத சிந்தனைக்குள் ஈர்க்கவே பலர் முயற்சி செய்கின்றனர்.
தங்கள் இனம் மீது பற்று இருந்தால் இனவாதத்தை எதிர்க்க வேண்டுமே தவிர யாரும் ஆதரிக்கக்கூடாது.
இனவாதம் பேசுகின்றவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் இனவாத செயற்பாடுகளுக்கு நாம் இடங்கொடுக்க மாட்டோம் என நீதி அமைச்சர் விஜயதாச  கூறினார்.