தமிழகம் வரும் ராகுல்: தி.மு.க.வுடனான கூட்டணியை உறுதிப்படுத்துகிறார்?!

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ட்ஸ் அப் தகவல்:

ருடாவருடம் செப்டம்பர் மாதம் மதிமுக மாநாடு நடத்துவது வழக்கம். இதில் இந்த வருடம் நடக்க இருக்கும் மாநாடு மிகவும் முக்கியத்துவம் பெறகிறது.

அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணிக்கு அச்சாரம் போடும் நிகழ்வாக இந்த மாநாடு இருக்கும் என்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, கர்நாடக முதல்வர் குமாரப்பா, இடதுசாரி தலைவர்கள், சரத்பவார், மாயாவதி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை அழைக்க திட்டமிட்டுள்ளார் வைகோ.

இது குறித்து ஏற்கெனவே தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திவிட்டார்.

ஆகவே செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ம.தி.மு.க. மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல்காந்தி வருவது உறுதிசெய்யப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

“காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உருவாக்கப்போகின்றன” என்று கிளம்யிய யூகத்துக்கு இதன் மூலம்  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.




English Summary
Rahul visiting Tamilnadu : Confirming DMK alliance