மத்திய பிரதேசத்தில் நாளை தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் ராகுல்

போபால்:

சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்தில் ராகுல்காந்தி நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் காஙகிரஸ் தலைவர் ராகுல்காந்த நாளை (17ம் தேதி) தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். பாஜக வலுவான நிலையில் உள்ள போபாலில் இருந்து ராகுல் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். இங்கு ராகுலை சிவன் பக்தர் என்று சித்தரிக்கும் சுவரொட்டிகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளது.

இங்கு சாலைகளில் 15 கி.மீ வரை பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார். லால்சவுக் பகுதியில இருந்து இந்த பிரச்சாரத்தை ராகுல் தொடங்குகிறார். தொடர்ந்து கட்சி தொண்டர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். முன்னதாக 11 இந்து அர்ச்சர்களின் ஆசீர்வாதத்துடன் பிரச்சாரத்தை ராகுல் தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rahul Gandhi To Launch Congress Campaign In Poll Bound Madhya Pradesh