புதிய வகை நெல் கண்டுபிடித்தவருக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி

நாண்டெட், மகாராஷ்டிரா

கடந்த 1983ஆம் ஆண்டு புதிய வகை நெல்லைக் கண்டுபிடித்த விவசாயி மரணம் அடைந்ததை ஒட்டி அவர் வீட்டுக்கு சென்று ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாண்டெட் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வந்த விவசாயி  தாதாஜி ராமாஜி கோப்ரகேட் ஆவார்.   இவரது குடும்பத்தில் 7 பேர் உள்ளனர்.   ஊதியம் ஈட்டும் ஒரே நபர் ராமாஜி தான்.   கடந்த 1983 ஆம் ஆண்டு இவர் மூன்று நெல் நாற்றுக்களை இணைத்து புதிய வகை நெல் ஒன்றை கண்டு பிடித்தார்.    அதைப் பயிர் செய்ததில் அமோக விளைச்சல் உண்டானது.

அப்போது எச் எம் டி கைக்கடிகாரங்கள் பிரபலமாக இருந்தது.   இந்த நெல் விற்ற பணத்தில் ராமாஜி ஒரு எச் எம் டி கைக்கடியாரம் வாங்கியதோடு இந்த நெல்லுக்கும் அதே பெயரை சூட்டினார்.   இந்த எச் எம் டி நெல் கண்டுபிடிப்புக்காக அவர் தேசிய விருது பெற்றார்.    இவர் கடந்த 3 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

ராமாஜியின் இல்லத்துக்கு இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.   மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில், “விவசாய விஞ்ஞானியான தாதாஜி ராமாஜி அரியவகை நெல்லான எச் எம் டியை கண்டு பிடித்தவர்.   இறக்கும் போது மக்களால் மறந்துவிட்ட நிலையில் இவர் வறுமையில் உயிர் இழந்துள்ளார்.  அவருடைய குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கவும்   அவரை இந்நாடு கண்டுக் கொள்ளாமைக்கு மன்னிப்பு கேட்கவும் அவர் இல்லத்துக்கு செல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rahul gandhi paid homage to farmer who found new paddy variety
-=-