புரட்டாசி ஸ்பெஷல்: சைவ மீன் குழம்பு

அசைவப் பிரியர்களுக்கு அலர்ஜியான மாதம், புரட்டாசி. இந்த ஒரு மாதமும் முட்டை உட்பட அசைவ உணவு வகைகளை சுவைக்க முடியாமல் திண்டாடுபவர்கள் பலர். அவர்களுக்கா, இதோ.. சைவத்தில் அசைவ பதார்த்தங்களை அளிக்கிறார் கே.எம். வசந்தி.

இப்போது.. சைவ மீன் குழம்பு:

 

தேவையானவை;-
வாழைக்காய்-1
கரம் மசாலா-1 ஸ்பூன்
Lemon  🍋 juice-1ஸ்பூன்
உப்பு- A pinch
நல்லஎண்ணை-100 ml
சின்ன வெங்காயம்-10 no’s
பூண்டு- 5 பற்கள்
புளி பேஸ்ட் -1/2 கப்
கறிமசாலா -2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -3
கறிவேப்பிலை -10 no’s
கடலை பருப்பு -1ஸ்பூன்
சோம்பு – 2 ஸ்பூன்
வெந்தயம்-1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1ஸ்பூன்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
கடுகு – 1/2ஸ்பூன்
பெருங்காயத்தின்-A pinch
தேங்காய் துறுவியது – 1/2 கப்

 

செய்முறை:-
வாழைக்காயை வட்டமாகவோ (அ) நீளவாக்கில் மீன் போலவோ நறுக்கி,, அதனுடன் கரம் மசாலா, lemon  🍋 juice, உப்பு சேர்த்து பிசைந்து 1 மணி நேரம் ஈற வைத்து – பாதி எண்ணையில் (50 ml)பொறித்து கொள்ளவும்.

பின் 25 ml எண்ணையில் சின்ன வெங்காயம் ,பூண்டு ,கறிவேப்பிலை , சோம்பு, கடலை பருப்பு , தேங்காய் இவை அனைத்தையும் நன்கு வதக்கவும் .
பின் நன்கு ஆற வைத்து இதனுடன் , கறிமசாலா ,மஞ்சள்தூள் , மிளகாய் தூள் , சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும்.
பின் வாணலியை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் 25 ml எண்ணையில் கடுகு , காய்ந்த மிளகாய் ,வெந்தயம் , பெருங்காயம் தாளித்து அதில் அரைத்த கலவையை மற்றும் புளி பேஸ்டை இட்டு தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின் இதில் பொறித்த வாழைக்காய் துண்டுகளை போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி பறிமாறவும்.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: purattasi special : Vegetarian fish curry, புரட்டாசி ஸ்பெஷல்: சைவ மீன் குழம்பு
-=-