மும்பை:

காராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் பஞ்சாப் வங்கி கிளையில் 10 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு பண மோசடி நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதும.

கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு பணி மதிப்பிழப்பு கொண்டு வந்ததை தொடர்ந்து வங்கி மூலம் பண பரிவர்த்தனை செய்ய பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.10 ஆயிரம் கோடி  அளவுக்கு சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டதாக பஞ்சாப் நேஷனல் வங்கி கூறியுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வங்கியின் வருடாந்திர கணக்கு ஆய்வின்போது, மும்பையில் உள்ள வங்கி கிளையில், சட்ட விரோதமாகவும், உரிய அங்கீகாரம் பெறாமலும் பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதன் காரணமாக வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பலர் பயனடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும்,  வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே பணிப்பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைகேடான பண பரிவர்த்தனை காரணமாக சுமார்  ரூ.10 ஆயிரம் கோடி  அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது என்றும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு உத்தரவி கோரப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து செபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களின் சேவையை கருத்தில் கொண்டு,  நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பரிவர்த்தனை நடப்பதில் வங்கி நிர்வாகம் உறுதியாக உள்ளது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட விரோத பண பரிவர்த்தனை, வங்கியின் வருமானத்தை விட 8 மடங்கு அதிகம் என்றும், இதுகுறித்து ஏற்கனவே மத்திய சட்டத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்,  கடந்த 5 ம் தேதி மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) பிரபல டயமண்ட் வி கோடீசுவரான   நிராவ் மோடி, அவரது சகோதரர், மனைவி பஞ்சாப் நேஷனல் வங்கியில் முறைகேடாக கடந்த ஆண்டு ₨ 280.70 கோடி அளவுக்கு  மோசடி செய்ததாக புகார் எழுந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும்,

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ குற்றவியல் சதித்திட்டம், மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நான்கு பிரிவுகளுக்கு எதிராக இந்திய குற்றவியல் பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறைகேடு புகார் காரணமாக  பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு பங்கு விலை பெருமளவு சரிவை சந்தித்தது.