உச்சநீதி மன்ற தீர்ப்பு: புதுச்சேரி சட்டப்பேரவை வரவேற்பு

டில்லி:

மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அதிகார போட்டி விவகாரத்தில், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்றும், ஆளுநர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் வரவேற்பு தெரிவிக்கப் பட்டது.

டில்லி மாநில அரசுக்கும், மாநில துணைநிலை ஆளுநருக்கும்  இடையே நீடித்து வந்த மோதல் போக்கு தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்றும்,  துணை நிலை ஆளுநருக்கு தன்னிச்சை அதிகாரங்கள் இல்லை என்றும் அதிரடி தீர்ப்பை கூறியது.

இந்த நிலையில், இன்று புதுச்சேரி மாநில சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் குறித்து பதில் தெரிவிக்க வேண்டிய அரசுத்துறை செயலாளர்கள், சட்டமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்காமல், ஆளுநர் கிரண்பேடியுடன் ஆய்வுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.

இதன் காரணமாக புதுச்சேரி சட்டமன்றம் 15 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில,  4 அரசுத் துறை செயலாளர்கள் மட்டும் அவைக்கு வந்தனர்.

இதற்கிடையில் உச்சநீதி மன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வெளியானதை  தொடர்ந்து, தீர்ப்பு குறித்து  அரசுக் கொறடா அனந்தராமன் சட்டப்பேரவையில்  தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சி உறுப்பினர் கள் மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

டில்லியை போலவே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவதும், மாநில அரசின் நலத்திட்டங்களில் மூக்கை நுழைப்பதும், அரசு அதிகாரி களை தன்னிச்சையாக அழைத்து ஆலோசனை நடத்துவதுமாக தனி அரசாங்கமே நடத்தி வந்தார்.

இந்த நிலையில் இன்று உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, நாடு முழுவதும் உள்ள ஆளுநர்கள் மற்றும்  துணைநிலை ஆளுநர்களுக்கு சரியான சவுக்கடி என்று கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இனிமேலாவது ஆளுநர் கிரண்பேடி மாநில அரசுடன் இணைந்து செயலாற்றுவாரா?

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Puducherry Assembly Welcomes Supreme court verdict, உச்சநீதி மன்ற தீர்ப்பு: புதுச்சேரி சட்டப்பேரவை வரவேற்பு
-=-