ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது .

வீர மரணமடைந்த லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு பாஜக மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் 50 பாஜகவினர் குவிந்தனர்.

இறந்த ராணுவ வீரர் உடலுக்கு பாஜக சார்பில் முதலில் மரியாதை செலுத்தப்படும் என அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைச்சர் பிடிஆர் அரசு சார்பில் மரியாதை செலுத்திய பிறகு மரியாதை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காரில் ஏறி சென்ற போது, இதில் அதிருப்தியடைந்த பாஜகவினர் அமைச்சர் காரை முற்றுகையிட்டு செருப்பை வீசியுள்ளனர்.

தேசிய கொடி கட்டப்பட்ட அமைச்சர் காரின் மீது செருப்பு வீசியதை வன்மையாக கண்டித்தும் செருப்பு வீசிய வன்முறை கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.