ரபேல் பேரம் குறித்த அரசு பதிலில் உள்ள குளறுபடிகள் : பிரசாந்த் பூஷன்

டில்லி

பேல் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு அரசு அளித்த விளக்கத்தில் பல குளறுபடிகள் உள்ளதாக கூற்ப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்திய அரசு ரபேல் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் இட்டது. அதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி நேரடியாக குற்றம் சாட்டியது. இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக அரசு விவரங்களை வெளியிட மறுத்தது. அதை ஒட்டி இந்த ஒப்பந்த விவரங்களை அரசு அளிக்க வேண்டுமென வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் முன்னாள் பாஜக அமைச்சர்கள் அருண் ஷோரி மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 31 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரபேல் விமான விலை தொடர்பான விவரங்களை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டது. அதை ஒடி அரசு ஒரு 16 பக்க ஆவணத்தை உச்சநீதிமன்றத்துக்கு அளித்துள்ளது. இந்த ஆவணங்கள் ரபேல் விமானம் வாங்க கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகள் என அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பிரசாந்த் பூஷன், “ரபேல் ஒப்பந்தம் குறித்து அரசு அளித்த பதிலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. அதி உள்ள குளறுபடிகள் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு மற்றொரு மனு தாக்கல் செய்ய உள்ளோம். இதில் உள்ள முக்கிய குளறுபடிகள் ஒவ்வொன்றாக காண்போம்

1. கடந்த 2015 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இந்தியா – பிரான்ஸ் அளித்த கூட்டறிக்கையில், ”பல முக்கிய தேவைகளுக்காக இந்திய விமானப் படை பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை பறக்க தயாரான நிலையில் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் வாங்க உள்ளதாக இந்திய அரசு பிரான்ஸ் அரசுக்கு தெரிவித்தது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசு அளித்த ஆவண முறைப்படி இந்த விமானங்கள் வாங்க ஒப்பந்தம் இட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆவணத்தில் உள்ளபடி முதலில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் விமான விலை குறித்த பேரம், இரண்டாவதாக ஒப்புதல் மற்றும் மூன்றாவதாக இந்திய அர்சு இது குறித்து அறிவிப்பு அளித்தல் ஆகிய வரிசை ஆகும்.

ஆனால் ரபேல் விவகாரத்தில் முதலில் பிரதமர் மோடி இது குறித்து அறிவித்து விட்டு அதன் பிறகு விலை குறித்து பேரம் பேசப்பட்டுளது. அதாவது அரசு இது குறித்டு அறிவிப்பு கொடுத்து சுமார் ஒரு மாதத்துக்கு பின்னரே பேரம் தொடங்கி உள்ளது. இந்த பேரம் சுமார் ஒரு வருடம் வரை நடந்த பிறகு 2016 ஆம் வருடம் அக்டோபர் 24 அன்று 36 விமானங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் கழித்து வாங்கப் போகும் விமானம் குறித்து முன்பே மோடி எவ்வாறு அறிவித்துள்ளார்?

2. கடந்த 2001 ஆம் வருடம் ஜூன் மாதம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் 126 போர் விமானங்கள் வாங்க ஒப்புதல் அளித்தார். அதன் பிறகு அதை தொடர்ந்து தேவையான விமான எண்ணிக்கை குறித்த சேவைகள் எண்ணிக்கை அறிக்கை கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உறுதி செய்யபட்டது. அதன்படி இந்திய அரசு 126 விமானங்கள் வாங்க முடிவு செய்தது.

இந்த 126 விமானங்களில் 18 விமானங்கள் உற்பத்தியாளரிடம் இருந்து முழுமையாக வாங்கவும் மீதமுள்ள 108 விமானங்கள் அந்த உற்பத்தியாளரிடம் இருந்து பெறப்படும் தொழில் நுட்பத்தைக் கொண்டு இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் மூலம் உற்பத்தி செய்யவும் முடிவு எடுக்கபடது.

இந்திய விமானப்படைக்கு 126 விமானங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக அரசு 36 விமானங்களை வாங்க எவ்வாறு முடிவு செய்தது? அது தவிர பாஜக அரசு அளித்த ஆவணங்கள் எதிலும் 36 விமானங்கள் மட்டுமே தேவை என குறிப்பிடப்படவில்லை

3. இந்த எண்ணிக்கை குறைவு பற்றி எதுவும் சொல்லாத அரசு, அதற்கு பதிலாக விமான தொழில் நுட்பத்தை இந்தியாவுக்கு பிரான்ஸ் அளிக்காததற்கு பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் மற்றும் இந்திய நிறுவனமன இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் இடையே உள்ள புரிதல் இன்மை என கூறுகிறது.

இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து பணி புரிய முடியாததர்கான காரணங்கள் இதோ :

* ரபேல் விமானத்தை இந்தியாவில் தயாரிக்க எடுத்துக் கொள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் நிறுவனத்துக்கு பிரான்சு நிறுவனத்தை விட 2.7 மடங்கு அதிக வேலை நேரம் தேவைப்பட்டது.

* டசால்ட் நிறுவனம் 126 விமானத்துக்கும் தேவையான ஒப்பந்தப் பணிகளை செய்தாக வேண்டி இருந்தது. ஆனால் அதில் 108 விமானங்கள் இந்தியாவில் செய்யப்படுவதால் எழுந்த பிரச்னைகள் மற்றும் பொறுப்புக்கள் குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

அரசு அளித்த ஆவணத்தில் உள்ள முக்கியமான மூன்று குளறுபடிகளுக்கு மோடி அரசு என்ன பதில் அளிக்கப்போகிறது?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Thanks : THE QUINT

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Prshant Bhushan described about loop holes in Govt statement to SC regarding Rafale deal
-=-