டில்லி,
ட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், உடனே தகுதி நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணயின்போது, குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.வை உடனடியாக தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவித்துள்ளது.
suprme court
2013ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி,  ஒரு எம்.பி.யா அல்லது எம்.எல்.ஏ.வோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆனால், நடைமுறையில் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுவது இல்லை என, பொதுநல அமைப்பினர்  மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.
மனுவில், விசாரணை கோர்ட்டு ஒரு எம்.பி.யையோ அல்லது எம்.எல்.ஏ.வையோ குற்றவாளி என உறுதி செய்தால் அவர்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவது இல்லை.
சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து விட்டு பாராளுமன்றம் அல்லது சட்டமன்ற முதன்மை செயலாளர் அறிவிப்பு வெளியிடும் வரை தங்கள் பதவியில் தொடருகின்றனர்.
இந்த காலதாமதத்தை தவிர்க்க விசாரணை கோர்ட்டு உத்தரவு நேரடியாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி அவர்களை உடனடியாக தகுதிநீக்கம் செய்வதுடன், அந்த தொகுதி காலியிடமாக அறிவிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுமீது, சுப்ரீம் கோர்ட்டில்  கடந்த ஜூலையில் விசாரணை  நடைபெற்ற போது தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியது.
election
இந்த வழக்கு நேற்று மீண்டும்,  தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சந்திரசூட், நாகேஸ்வர ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது,  விசாரணை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த உடனேயே எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஆதரவு தெரிவிக்கிறது.
தேர்தல் ஆணையம் சார்பில், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற முதன்மை செயலாளர் அறிவிப்பு வெளியிடும் வரை ஒரு எம்.பி.யோ அல்லது ஒரு எம்.எல்.ஏ.வோ தொடர்ந்து தங்கள் பதவியில் இருக்கின்றனர்.
முதன்மை செயலாளர் குறிப்பிட்ட எம்.பி, எம்.எல்.ஏ.வின் தொகுதி காலியிடமாக அறிவித்த பிறகே தேர்தல் ஆணையத்தின் நடைமுறை தொடங்குகிறது. ஆனால் இதற்கு சட்டம் தடையாக உள்ளது என்று கூறியது.
இதைதொடர்ந்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மனீந்தர் சிங் வாதிடுகையில்,
விசாரணை கோர்ட்டால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து இடைக்கால தடை பெறுகின்றனர். அப்படியே அவர்கள் தடை ஆணை பெற்றாலும் தங்கள் பதவியின் பலனை அடைய கூடாது என்றார்.
அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.