சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் தயாரிப்புக் குழு ஒப்புதல்

சென்னை

ர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தீபாவளி அன்று விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி உள்ளது சர்கார் தமிழ் திரைப்படம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். இதில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் கதை தன்னுடையது என வருன் என்னும் இயக்குனர் போர்க்கொடி தூக்கினார். அதனால் படம் வெளிவராது எனக் கூறப்பட்டது. அதன் பிறகு இயக்குனர் முருகதாஸ் சமரசம் செய்த பிறகு படம் வெளியாகியது. படத்தின் டிக்கட்டுகளை விநியோகஸ்தர்கள் கருப்புச் சந்தையில் விற்க சொல்வதாக கூறி தஞ்சையில் ஒரு திரையரங்கம் திரையிட மறுத்தது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தமிழக அரசையும் அதிமுகவையும் வெகுவாக தாக்கி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட இலவசப் பொருட்களை கொளுத்துவதாக வந்த காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தற்போது சர்ச்சைக்குரிய கட்சிகளை சர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்க படத் தயாரிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: production team agreed to remove controversial scenes from Tamil film SARKAR
-=-