ஹாலிவுட் சீரியல் முடிவடைந்த நிலையில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா சோப்ரா

தான் நடித்து வந்த ஹாலிவுட் சீரியல் முடிவடைந்த நிலையில் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒளிப்பரப்படும் ’குவாண்டிகோ’ சீரியலில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடத்து வந்தார். அதன் முழு படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்துள்ளதாக பிரியங்கா சோப்ரா இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார்.

priyankachopr

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரியங்கா சோப்ரா 2003ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார். அதன்பிறகு பாலிவுட் சினிமாக்களில் அறிமுகமாகிய அவர் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகம் ஆனார். இந்த ஒரு படத்துடன் தமிழுக்கு டாடா சொன்ன பிரியங்கா பாலிவுட் சினிமாக்களில் மட்டும் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் சறுக்கல்களை சந்தித்தாலும், அதன்பின்னர் ஏறு முகமாகவே இருந்தன. பாலிவுட்டில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக பல விருதுகளை பெற்றார்.

ஃபிலிம்பேர் விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ விருதுகளை வாங்கி குவித்த பிரியங்கா சோப்ரா கடந்த 3 ஆண்டுகளாக ஆங்கில தொடரில் கதாநாயகியாக நடத்து வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில பாப் ஆல்பம் ஒன்றை தயாரித்து பிரியங்கா வெளியிட்டார். ’மை சிட்டி ‘ என்ற பெயரில் வெளியிடப்பட்ட அந்த ஆல்பம் இந்தியாவை காட்டிலும் அமெரிக்க ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இதன் காரணமாக ஹாலிவுட் பட வாய்ப்புகள் அவரை தேடி வரத்தொடங்கினர்.

qauntico

இதையடுத்து, 2015ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா “குவாண்டிகோ “ என்ற ஹாலிவுட் சீரியலில் நடக்க முடிவெடுத்து ஒப்பந்தமாகினார். இந்த தொடரில் பிரியங்கா கதாநாயகியாக நடித்து வந்தார். அவரை மையப்படுத்தியே தொடர் எடுக்கப்பட்டது. இதன் மூலம் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பிரியங்கா பெற்றார்.

தற்போது ஏபிசி தொலைக்காட்சியில் மூன்று சீசன்களை ஒளிப்பரப்பாகி வரும் இந்த தொடர்ந்து விரைவில் முடிவடையவுள்ளது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. இது குறித்து தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா “ இதுவரை சென்ற குவாண்டிகோ தொடருக்கும், எனக்கு ஆதரவளித்து வந்த ரசிகர்களுக்கும் நன்றி “ என்று கூறியுளார். மேலும், ’குவான்டிகோ’ குழுவினரை விட்டு பிரிவது வருத்தமாக உள்ளதாகவும் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

இந்தத் தொடரில் பிரியங்கா சோப்ரா, அலெக்ஸ் பாரிஷ் என்ற எஃப்.பி.ஐ. ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குவாண்டிகோ தொடர் அமெரிக்க ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-