pricess kate cooking
 
2011 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்திற்கு தாம் வீட்டில் தயாரித்த சட்னி செய்து பரிசளித்த தகவலைத் தற்பொழுது பகிர்ந்துத் கொண்டுள்ளார் சீமாட்டி கேட் மிடில்டன்.
மாமியாருக்கு என்ன பரிசளித்து அசத்தலாம் எனும் கேள்வி, சாதாரணமாய் எல்லோரும் மூளையைக் கசக்கிக்பிழிந்து முடிவு செய்வர். ஆனால், இளவரசி, கேட் மிடில்டன் திருமணத்திற்கு பிறகான தனது முதல் கிறிஸ்துமஸ் பரிசாக ராணி இரண்டாம் எலிசபத்திற்கு என்ன இருக்க வேண்டும் என்றச் சிந்தனைக்கு, ஒரு அற்புதமான பதில் வந்தது: தம் பாட்டியிடம் கற்ற சமையல் கலையினை அவிழ்த்து விட்டு, தாமே தயார் செய்த பல்வேறு வகையான குழம்பு தான் அது.
kate1
ஏப்ரல் 21 ம் தேதி ராணி இரண்டாம் எலிசபத் தன் 90வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதையடுத்து வெளியிடப்பட்டுள்ள ‘எங்கள் மகாராணியின் 90’ எனும் ஐடிவி ஆவணப்படத்தில், கேட் 2011 ல், சாண்ட்ரிகத்தில் தனது முதல் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, மஹாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு என்ன பரிசளிப்பது என மிகவும் குழம்பிபோய் இருந்த்தாகவும், இறுதியில் வீட்டில் செய்யப்பட்ட ஏதாவது ஒருப் பரிசினை வழங்குவேனென்று சபதமிட்டு, கடைசியில், தனது சொந்த பாட்டிசெய்முறையை பின்பற்றிப் பல்வேறு கறிவகைகளைச் தாமே சமைத்து பரிசளித்ததாகவும் கூறினார். மறுநாள் ராணியார் தாம் பரிசளித்த கறிவகைகளை உணவு மேசையில் கிட்த்தியிருந்ததைப் பார்த்தவுடன் தாம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டதாகவும் கூறினார்.
kate2
கேம்பிரிட்ஜ் சீமாட்டி, கேட் கணவரில்லாது தனியாய்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தம்முடைய மாமியார் (ராணி) உண்மையில் அக்கறை கொண்டவர் எனப் புகழாரம் சூட்டினார்.
“என்னால் நினைவுப்படுத்த முடிகிறது. நான், முதல் முறையாகச் சாண்ட்ரிகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட இருந்தது, நான் ராணிக்கு என்ன கிறிஸ்துமஸ் பரிசு கொடுப்பது எனக் கவலைப்பட்டேன். நான் யோசித்தேன், ‘ஐயோ, நான் ராணிக்கு கொடுக்க வேண்டும்?” என மேலும் கூறுகிறார் 34 வயதான இளவரசி, அந்த ஆவணப்படத்தில்.
எனவெ, நான் என் சொந்த தாத்தா, பாட்டி என்ன பரிசு அளிப்பேன் என எண்ணிப் பார்த்தேன். நான் அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’என்று நினைத்துக் கொண்டேன். அன்று நான் எடுத்த முடிவு கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்திருக்கலாம், இருந்தாலும் அன்று நான் என் பாட்டியின் செய்முறையை பின்பற்றிக் கறிவகைகளைச் செய்வதென முடிவெடுத்தேன்,” என்று அவர் கூறுகிறார்.
 
kate3
 
அந்தப் பரிசளிப்புக்குப் பின், எனக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது. ஆனால், மறுநாள் ராணியார் நான் பரிசளித்த கறிவகைகளை உணவு மேசையில் கிடத்தியிருந்ததைப் பார்த்தவுடன் ஆதவனைக் கண்ட பனித்துளிப் போல், மறைந்தது பதற்றம். அவரது இந்தச் செயல் மிகவும் எளிமையானது தான் என்றாலும் எனக்கு இது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவர் பல சந்தர்ப்பங்களில் அப்படி செய்வதைப் நான் கவனித்திருக்கிறேன். உண்மையில் அது, அவரது சிந்தனைத் திறனையும், எல்லோரின் மீதும் அவர் கொண்டுள்ள பரிவினையும் காட்டுகிறது.” என்றார் இளவரசி கேட்.
கேட்டின் சகோதரி பிப்பா மிடில்டன் 2012 ல் வெளியிடப்பட்ட சமையல் செய்முறை புத்தகமான “பாட்டியின் மேரோ சட்னி’யில் விரிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளபடி வழிமுறைகளைப் பின்பற்றி, பல மணி நேரம் செலவுசெய்து “மஜ்ஜை சட்னி” யை அவர் பரிசளித்தார் என்று கருதப்படுகிறது.
டச்சஸ் தான் குறிப்பிடும் “பாட்டியின் செய்முறை”யில் எந்தப் பாட்டியிடம் இந்தச் சமையல் செய்முறையைக் கற்றாரெனக் குறிப்பிட வில்லை.
kate4
 
இரண்டு மணி நேர ஓடும் ஆவணப்படத்தில் இளவரசர் சார்லஸ் மற்றும் கார்ன்வால் சீமாட்டி, கேட்டின் கணவர் இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி, நியூயார்க் சீமான், மற்றும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூகெனி ஆகியோரின் பங்களிப்புகளைப் உள்ளடக்கியுள்ளது.
அரச குடும்பத்தின் 11 உறுப்பினர்கள் நேருக்கு-நேர் பேட்டிகளைக் கொடுத்துள்ளதே இந்த ஆவணப்படம் ஒரு நிமிடம் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பே சாதனையை ஏற்படுத்திவிட்டது என ரேடியொ டைம்ஸ்- இதழ் கருத்து தெரிவித்துள்ளது.