சென்னை: முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என முல்லை பெரியார் விவகாரத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, விவசாய சங் தலைவர் இளங்கீரன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். முதலில் விவசாயிகளிடம் பிரதமர் மோடியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக விவசாய சங்கத்தலைவர் இளங்கீரன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பது ஒருபுறம் இருக்கட்டும், முதலில் இந்திய விவசாயிகளிடம் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள், உங்கள் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி அவர்களை பார்த்து இந்திய விவசாயிகளிடம்  மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.

மேலும்,  நீங்கள் தமிழக விவசாயிகள்  சார்பாக கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்ப்போம்;  நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாய வருமானத்தை இடத்தைப் பார்க்கிறோம் என்று சொன்னீர்களே என்னாயிற்று 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்காகா கொண்டு வந்துள்ளோம் என்று கூறினீர்களே அந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு என்று தொடர்ந்து ஒரு ஆண்டு காலமாக போராடி வருகிறோம் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட சிந்திக்காமல் அந்த போராட்டத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அமைச்சருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினார்கள் என்ற குற்றத்திற்காக அவர்கள் மீது கண்மூடித்தனமாக காரை ஏற்றி அப்பாவிகளை கொலை செய்தீர்கள்.. முதலில் அந்த மாநில முதல்வரை  பதவி விலக சொல்லுங்கள், அதன்பிறகு தமிழகத்தில் வந்து நீங்கள் பேசுங்கள் அப்பொழுது நீங்கள் பேசுவது நியாயம் என்று நாங்கள் கூறுகிறோம் இதையெல்லாம் கேட்க துப்பு இல்லை நியாயம் பேச வந்துட்டீங்க,

அடுத்தவங்கள பத்தி அப்புறம் நியாயம் பேசலாம் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் அது போன்றுதான் உள்ளது உங்களுடைய பேட்டியும் பேச்சும் உள்ளது.

இவ்வாறு காட்டமாக கூறி உள்ளார்.

விவசாய சங்கத்தலைவர் இளங்கீரன் – வீடியோ