சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை : ஜனாதிபதி ஒப்புதல்

டில்லி

னிரெண்டு வயதுக்கு குறைந்த சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவில் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.    காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் ஒரு சிறுமி பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட  சம்பவம் நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியது.    அதே போல் உ.பி.   மாநிலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் உட்பட பலரால் ஒரு சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் நாட்டில் சர்ச்சையை உண்டாக்கியது.

அதை ஒட்டி மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது.   அந்த சட்டப்படி 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.   இந்த சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டது

இந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: President approved for law to give death sentence for child rapists
-=-