காங்கிரஸ் கட்சியின் ரம்ஜான் விருந்தில் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்டார்

டில்லி

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி அளிக்கும் ரம்ஜான் விருந்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இரண்டாண்டு இடைவேளைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இஃப்தார் என அழைக்கப்படும் ரம்ஜான் விருந்தை இன்று ராகுல் காந்தி தலைமையில் அளீத்து வருகிறது.    முன்னாள் சோனியா காந்தி தலைமையில் கடந்த 2015 ஆம் ஆண்டு அளிக்கபட்ட விருந்துக்குப் பின் 2016 மற்றும் 2017ஆம் வருடங்களில் ரம்ஜான் விருந்து அளிக்கப்படவில்லை.

இந்த விருந்துக்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைக்கப்படவில்லை எனவும் அவர் ஆர் எஸ் எஸ் விழாவில் கலந்துக் கொண்டதால் அவரை அழைக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின.   ஆனால் அதை காங்கிரஸ் தலைமை அலுவலகம் மறுத்து பிரணாப் முகர்ஜி அழைக்கப்பட்டதாக தெரிவித்தது.   இந்நிலையில் பிரணாப் முகர்ஜி இவ்விருந்தில் கலந்துக் கொள்ள மாட்டார் என பாஜக தரப்பில் கூறப்பட்டது.

                              விருந்தில் கலந்துக் கொண்ட தலைவர்கள்

ஆனால் விருந்தில் பிரணாப் முகர்ஜி கலந்துக் கொண்டுள்ளார்.  அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் வெளியாகி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Pranab mukherjee participated in Iftar hosted by Rahul gandhi
-=-