சாத்தான்குளம்:
ந்தை மகன் காவல்துறையினரால் கொடுமையாக தாக்கப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக சாட்சியம் அளித்த பெண் காவலர் ரேவதி வீட்டுக்கு உடனே பாதுகாப்பு வழங்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலகம்  முழுவதும் பூதாகரமாக எழுந்துள்ளது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக, தற்போது  சிபிசிஐடி விசாரணை நடைபெற்று, காவல்துறையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கொலை வழக்கில், முக்கிய நேரடி சாட்சியாக அதே காவல்நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் சாட்சியம் அளித்தார். இதனால், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உடனே பாதுகாப்பு வழங்க சிபிசிஐடி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவிட்டது.
இதையடுத்து, அவரது வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.