கொல்கத்தா:

‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் இதர வங்கிகளுக்கும் தொடர்பு இருப்பதால் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மம்தா டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பணமதிப்பிழப்பின் போது பெரிய அளவில் பண மோசடி நடந்துள்ளது. அந்த சமயத்தில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 11 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை நிரவ் மோடி மோசடி செய்துள்ளார். இந்த மோசடி என்பது ஒரு பகுதி தான் வெளியே தெரிந்துள்ளது.

இதன் முழு உண்மை வெளி வர வேண்டும். பணமதிப்பிழப்பின் போது சில வங்கிகளில் பணியாற்றிய மு க்கிய அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களை மாற்றி அல்லது நீக்கம் செய்து உத்தரவிட்டவர்கள் மற்றும் இதற்கு பரிந்துரை செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.