இந்தியாவின் மிக நீண்ட ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

இந்தியாவின் மிக நீளமான இரண்டடுக்கு ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலத்தின் மேலே மூன்று வழிச்சாலையும், கீழே இரண்டு வழி ரயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன.

railway

1997ம் ஆண்டு முன்னால் பிரதமர் தேவ கவுடாவால் அடிக்கல் நாட்டப்பட்டு 2002ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் இந்த இரண்டடுக்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் போகிபீல் என்ற இடத்தில் 4.94 கி.மீ துரத்திற்கு இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்த பாலத்தின் கட்டிடப்பணிகள் முழுமையாக நிறைவடைந்தன. இந்தியாவின் மிக நீளமான ரெயில்வே பாலமான இதனை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பாலமான இதில், மேலே மூன்று வழிச்சாலையும் கீழே இரண்டு வழி ரெயில் தடமும் அமைக்கப்பட்டுள்ளன.

வட கிழக்கு மாநிலங்களில் போக்குவரத்தை மேம்படுத்துவதன், இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த பாலம் கட்டப்பட்டது. இதற்கு முன்பாக கேரளாவில் வேம்பநாடு பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம்( 4.62கி.மீ.நீளம்) இந்தியாவின் மிக நீண்ட மேம்பாலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-