பிளஸ்1, பிளஸ்2 தமிழ், ஆங்கிலம் இனிமேல் ஒரே பேப்பர்தான்: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல்  11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

இதுவரை தமிழ் முதல்தாள், தமிழ் இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல்நாள், இரண்டாம் தாள் என்றும் மொழிப்பாடங்களில் இரு தேர்வுகள் நடைபெற்று வருவது வழக்கம்.

ஆனால், இந்த கல்வி ஆண்டு முதல்,  இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து, அரசாணை வெளியிட்டு உள்ளது.

இந்த புதிய மாற்றம், இந்த ஆண்டு முதலே அமலுக்கு வருவதாகவும் அதில் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக இனிமேல் பிளஸ்1, பிளஸ்2 தேர்வு தேர்வின் மொத்த மதிப்பெண்ணும்1200-ல் இருந்து ஆயிரமாக குறைகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: plus 1, Plus 2 language two papers merged as one paper: Tamilnadu Government order, ஆங்கிலம் இனிமேல் ஒரே பேப்பர்தான்: தமிழகஅரசு அரசாணை வெளியீடு, பிளஸ்1, பிளஸ்2 தமிழ்
-=-