சென்னை: கோவை உள்பட பல மாவட்டங்களில் பிஎஃப்ஐ கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசி அச்சுறுத்தைலையும், வன்முறையில் ஈடுபட்டு வரும்  சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 17 மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன்  தலைமை செயலாளர் இறையன்பு அவசர ஆலோசனை நடத்தினார்.

திமுக எம்.பி. ராசாவின்  இந்து துவேச பேச்சு, என்ஐஏ சோதனை போன்றவற்றால், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் மேலும் சில மாவட்டங்களில் பாஜக பிரமுகர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மற்றும்  பாஜக நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் பிஎஃப்ஐ கட்சியை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பல மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.  அதிக பட்சமாக கொண்டு மண்டத்தில் பொதுமக்கள் கடுமையான துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து,  அங்கு வன்முறையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு – சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதுதொடர்பாக  17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து 17 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, கார் எரிப்பு சம்பவங்கள் நடத்த நிலையில், சட்ட- ஒழுங்கு நிலை குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுடனும் சட்டம் – ஒழுங்கு மற்றும் அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து  தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசித்தார்.