பெட்ரோலிய திட்டங்கள் – அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Must read


வாஷிங்டன்: அமெரிக்காவில் பெட்ரோலிய வளம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக அந்நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது இந்தியா.
இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது, “பெட்ரோலிய வளம் தொடர்பான திட்டங்களை இணைந்து மேற்கொள்ளலாம் என அமெரிக்கா அழைப்பு விடுத்தது.
அதன்படி, இரு நாடுகளுக்கு இடையே பெட்ரோலிய வளம் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, அமெரிக்காவில் கச்சா எண்ணெயை தேக்கி வைப்பது தொடர்பான பேச்சு நடைபெற்று வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பை அதிகரிக்க முடியும்” என்றுள்ளார்.
அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் டாம் ப்ரூலெட் பேசியதாவது, “பெட்ரோலிய வளம் சார்ந்த இரு நாடுகளின் கூட்டுறவு திட்டத்தில் முதலில் கச்சா எண்ணெய் சேமிப்பு தொடர்பான பேச்சு நடைபெறுகிறது. இத்திட்டம் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்றுள்ளார்.

More articles

Latest article