பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டாது – டிஜிட்டல் டிஸ்பிளேவை காரணம் காட்டும் வாடிக்கையாளர்

பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டாது என்று ஒரு வாடிக்கையாளர் வேடிக்கையான காரணத்துடன் உறுதியாக கூறியுள்ளார். பெட்ரோல் பங்குகளில் உள்ள டிஜிட்டல் டிஸ்பிளேயில் 99.99 ரூபாய் வரை மட்டுமே விலையை மாற்றி அமைக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

petrol_prices_surge_hike_display_machine_9999_re

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கொண்டே வருகிறது. பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது அரசின் கையில் இல்லை என மத்திய அரசு கூறி வருகிறது. ஒரு புறம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதே நிலை நீடித்தால் பெட்ரோல் விலை நூறு ரூபாயை எட்ட கூடும் என்று வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பெட்ரோல் விலை கண்டிப்பாக 100 ரூபாயை எட்டாது என வாடிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதற்கு என்ன வேடிக்கையான காரணத்தை அந்த வாடிக்கையாளர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “ பெட்ரோல் பங்குகளில் உள்ள பெட்ரோல் விலையைக் காட்டும் டிஜிட்டல் டிஸ்பிளே, நாள்தோறும் விலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படும். இப்போது பெட்ரோல் பங்குகளில் உள்ள டிஸ்பிளேயில் 99.99 ரூபாய் வரை மட்டுமே விலையை மாற்றி அமைக்க முடியும்.

அதாவது விலை ரூ.100.55 என இருந்தால், டிஜிட்டல் டிஸ்பிளேயில் 00.55 என்றுதான் காட்டும்! சரியான விலையைக் காட்டுவதற்கு டிஜிட்டல் டிஸ்பிளேயில் கூடுதலாக ஒரு இலக்கம் வரும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும் “ என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Petrol Prices Can't Be Raised Above Rs 99.99/litre Because Machines Can't Display The Figure!