நிறைவான வாழ்வு தரும் ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம்!

Must read

1maa-bhuaneswari
செல்வமும் புகழும் பெற ஸ்ரீ புவனேஸ்வரி மந்திரம் சொல்லி வழிபடுங்கள். எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்பது ஐதிகம்.
இந்து சம்பிரதாயத்தில் ஸ்ரீ புவனேஸ்வரி அன்னை மிக உயர்ந்த தெய்வமாகப் போற்றப்படுகிறாள். இவளை வழிபட கல்வி, செல்வம், வீரம் என யாவும் கிட்டும். எவ்வளவு மோசமான தரித்திரனும் புவனேஸ்வரியை வழிபட செல்வமும் உயர்வும் பெறுவான் என்று சிவபிரானும் கூறுகிறார்.
புவனேஸ்வரி மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் புவனேஸ்வர்யை நமஹ||
– இந்த மந்திர ஜெபத்தை முதன் முதலில் பௌர்ணமி அன்று தொடங்கவும். மஞ்சள் நிற ஆடை அல்லது மஞ்சள் பட்டுத்துணி உடுத்தி மஞ்சள் துண்டு விரித்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபிக்கவும்.
நெய் விளக்கேற்றி விளக்கில் ஸ்ரீ மாதா புவனேஸ்வரியை ஆவாஹனம் செய்து, வாழையிலையில் பச்சரிசி பரப்பி அதில் புவனேஸ்வரி யந்திரம் வைத்து அந்த யந்திரத்தை குங்குமம், ரோஜா இதழ்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சித்து 3000 தடவை மந்திரம் சொல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய மந்திரம் சித்தியாகும். பின்னர் அந்த யந்திரத்தையும் ஜப மாலையையும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.
பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைக்கு இனிப்பு பண்டம், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து பூஜையை நிறைவு செய்க.
இந்த ஜெப முறை விரைவான நிறைவான நல்வாழ்வு தரும் என்று சொல்லப்படுகிறது.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article