நாட்டில் வேலையில்லா திண்டாட்ட பிரச்னை நிலவுவது ஏன்?….ஜக்கி வாசுதேவ் விளக்கம்

பெங்களூரு:

நாட்டில் பல வேலைகள் இருக்கும் போது மக்கள் குறிப்பிட்ட ஒரு வேலையை தேடுவதால் தான் பிரச்னை எழுகிறது என்று ஜக்கி வாசுதேவ் கூறினார்


பெங்களூரு ஐஐஎம் வளாகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இன்று கலந்து கொண்டார். அப்போது நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் கூறுகையில்,‘‘இந்த நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து யாரும் பேசக் கூடாது. இந்த நாட்டில் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. நாட்டில் பல விதமான வேலைகள் இருக்கும் போது மக்கள் ஒரு குறிப்பிட்ட வகையான வேலையை மட்டுமே தேடுகின்றனர்.

நாட்டில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண மக்கள் தங்களது அறிவை பயன்படுத்த வேண்டும். வேலை செய்யும் அறிவும், பார்க்கும் திறன் கொண்ட கண்களும் இருந்தால் செய்வதற்கு ஆயிரகணக்கான விஷயங்கள் நம்மை சுற்றி உள்ளனன. இந்தியாவில் கலாச்சாரத்தில் எவ்வித முன் மாதிரியும் கிடையாது. ஒவ்வொரு சிந்தனைகளும் சுயமாக தோன்றியவை’’என்றார்.
English Summary
People prefer 1 kind of job when there are more: Sadhguru on unemployment in India