வார ராசிபலன்: 26-10-18 முதல் 01-11-18 வரை – வேதா கோபாலன்

மேஷம்

பெரிசாய் சர்ஜரியெல்லாம் ஆகும் என்று பயமுறுத்தின டாக்டர்ஸை  நினைச்சு நீங்களும் தூக்கம் இழந்து கவலைப்பட்டீங்களே? இப்போ அப்பாடா என்று மனசில் நிம்மதி வந்ததா?  வெறும் மருந்து மாத்திரை யிலேயே சரியாயிடும்ங்க பிரச்சினை. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷமான காதல் வாழ்க்கை நிலவும். கல்யாணமாகாதவர்கள் காதல் என்னும் தேன்கடலில் விழுவீங்க. திடீர்னு வேலை கிடைக்கும். சட்டென்று பிடிச்சுக்கிட்டு முன்னேறுங்க. அனேகமாக அது வெளிநாட்டு வேலையாக இருக்கவும் வாய்ப்பிருக்கு. அம்மாகிட்ட வம்பு மற்றும் சண்டை வேண்டாங்க. அப்புறம் நீங்களே அதை நெனைச்சு ஃபீல் பண்ணுவீங்க. மாணவர்கள் தயவு செய்து அலட்சியமா இருக்காதீங்க. எனிவே.. வெளிநாட்டில் படிக்கறவங்க ஜமாய்ப்பீங்க.

ரிஷபம்

கண்ணாடி பவர் மாற்ற வேண்டியிருக்கலாமுங்க. அதனால் பரவாயில்லை. பெரிசா எந்த ஆரோக்யப் பிரச்சினையும்.. செலவும் வராது. லோக் போட மனு செய்ய இது உகந்த நேரம் இல்லீங்க. ஆனால் புது வேலைக்கு மனு செய்ய சரியான நேரம். வழக்கத்தைவிட சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருந்தா லும்.. வேலை பற்றி அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டாலும் வருமானத்தில் குறை இருக்காதுங்க.வேலையே இல்லைன்னு தலையில் கையை கை வெச்சு உட்கார மாட்டீக் உங்க ராசிக்காரங்க. அது பெரிய சந்தோஷம் இல்லீங்களா? கல்யாண வாழ்க்கை சந்தோஷமா இருக்குங்க. திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம் எல்லாம் உங்களைத் தேடி வரக்கூடிய நேரங்க இது.

மிதுனம்

பேச்சினால் நல்லவங்களை பகைச்சுக்க வேணாங்க. ஆரோக்யத்தைக் கண் மாதிரி பார்த்துக்க வேண்டிய நேரம் இது. எந்த விதமான கெட்ட பழக்கமும் அண்டாம பார்த்துக்குங்க. யாராச்சும் பழக்கிவிட நினைச்சா அவங்க உங்க நண்பர்கள் அல்ல. பகைவர்கள் என்பதை உணர்ந்து ஒதுங்குங்க. குடும்பத்தினர் உங்களைப் புரிஞ்சுக்காம செயல்பட சான்ஸ் இருக்கு. விடுங்க. தானாப் புரியும். சண்டை எதுவும் வேணாங்க. சுருங்கச் சொன்னால் நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு தள்ளி நின்று வேடிக்கை பாருங்க. வாழ்க்கை இனிக்கும். குழந்தைகள் உங்கள் வயிற்றில் பால்.. தேன்.. பன்னீர்.. என்று எல்லாமும் வார்ப்பார்கள். அவர்களின் புகழ் வெளிச்சம் பட்டுக் கண்கூசும்.

கடகம்

வெளியூர் அல்லது  வெளிநாட்டில் உள்ள குழந்தைகளுக்கு நன்மைகள் நிகழும். அவங்க தாய் நாட்டுக்கு வந்தோ அல்லது நீங்க வெளிநாடு போயோ அவங்களைச் சந்திக்க சான்ஸ் இருக்கு. சந்திக்கத் தயாரா இருங்க. குழந்தைங்களுக்குத் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கவும் வாய்ப்பிருக்கு.  கணவருக்கு/ மனைவிக்கு ஏகப்பட்ட பயணங்கள் இருக்கும். தடுக்காதீங்க. உடனடி நன்மைகளும் இருக்கும். எதிர்காலத்திலும் நன்மை உண்டு. தாயாருக்கு விருதுகளோ, பரிசுகளோ கிடைத்து அவங்க புகழ் அதிகமாகும். செல்வாக்கும் கூடும். ஆரோக்யத்தில் தீடீர்ப்பிரச்சினை ஏற்பட்டாலும் அது திடீரென்று உடனடியாகச் சரியாகவும் செய்யும்.

சிம்மம்

சகோதர சகோதரிகளின் புகழ் அதிகரிக்கும். அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள தனிப்பட்ட பாசம் அதிகமாகம். சந்திச்சுப் பேசுவீங்க. நன்றி சொல்வீங்க. மன்னிப்புக் கேட்பீங்க. அணைச்சு மகிழ்வீங்க. உங்களோட தொழில் பக்தி காரணமா மேலும் மேலும் முன்னேற்றம் கிடைக்கும். இத்தனை நாள் அது இல்லாமல் வெறுத்துப் போயிருந்தீங்க. நாம் என்ன செய்தாலும் முன்னேற முடியலையே என்ற ஆதங்கம் இனி இல்லைங்க. நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்கிறமாதிரி நடுவில் கொஞ்சம் கம்பீரம் குறைந்ததாக நீங்கதான் கற்பனை செய்துக்கிட்டீங்க. உண்மையில் நீங்க என்னிக்கும் சிங்கம் மாதிரி தான் சிறப்பா இருப்பீங்க. மண வாழ்க்கையில் சின்னச்சின்ன கடுகு சைஸ் நிரடல்கள் இருந்தாலும் அவை பிரச்சினைகள் ஆகாது.

கன்னி

சட்டென்று எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசத்தான் தோன்றும். என்ன செய்ய உங்க குணம் மட்டும் இல்லை.. அடுத்தவங்க உங்களை அந்த அளவுக்கு இழுத்து விடுவதும் காரணம்தான். எனினும் இன்னும் கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்க. உங்க கிட்ட இருக்கும் சிறப்புகள் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டாமா. என்ன ஒரு கடும் உழைப்பு. நேர்மையான சிந்தனை. குடும்பத்திற்காகச் சம்பாதிக்கும் சின்சியர் தன்மை. சூப்பர்ங்க. கலைத்துறைல இருக்கறவங்க ஜமாய்ப்பீங்க. மேடைப் பாடகர்களும் பேச்சாளர்களும் ஏகப்பட்ட பாராட்டுக்கு உள்ளாவீங்க. மகன் அல்லது பற்றி டென்ஷன் வேண்டாம். எல்லாம் சிறிது காலத்தில் சரியாகி உங்க வயிற்றில் தேன் வார்ப்பான்.

துலாம்

மேலதிகாரியோ அல்லது வீட்டில் ஒரு பெரிய நபரோ தற்காலிகமாக இல்லாத காரணத்தால கொஞ்சம் பொறுப்புக்கூடும். அதெல்லாம் கவலைப்படாதீங்க. உங்களுக்கு எதுதான் சாத்தியம் இல்லை? ஜமாய்ச்சுடுவீங்க. குடும்பத்தோடு ஜாலியா வெளியூர், வெளிமாநிலம் அல்லது வெளிநாடு போவீங்க. சமுதாயத்தில் அந்தஸ்த்து அதிகரிக்கும். உங்க திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்த நிறைய சந்தர்பபங்கள் கிடைப்பதால் பாராட்டும் பரிசுகளும் குவியும். கலைஞர்களுக்குப் பொற்காலம். காதல் விவகாரங்களில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும்.

சந்திராஷ்டமம் :அக்டோபர் 27 முதல் 29 வரை

விருச்சிகம்

எல்லா விஷயங்களிலும் தேவையற்ற பரபரப்பு உங்களுக்கு வரும். அதை அமைதிப்படுத்தப்பாருங்க. குறிப்பாய்க் குழந்தைங்க பற்றி வேண்டாத கவலைகள் படறீங்களே? அவங்களுக்கு இப்போ உங்களால நன்மைகள் நடக்கும். உங்க வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும் அவங்க வாழ்க்கையை மட்டுமில்லாம உங்க வாழ்க்கையையும் உயர்த்தும். பயணங்கள் நிறைய இருக்கும். களைப்பும் இருக்கும் என்றாலும் கோயில் பிரார்த்தனை என்று உங்க மனசுக்குப்பிடிச்ச வகையில் அவை அமையும். ஜாலியாவும் இருப்பீங்க. பிறகென்ன. கற்பனை பயங்களைத் தூக்கிப்போடுங்க. இத்தனை காலம் இருந்த செலவுகள் குறையும். விரயங்கள் குறையும். என்றாலும் மனசுக்குப் பிடிச்ச பொருட்களை உங்களுக்கும், உங்களுக்கு வேண்டியவங்களுக்கும் வாங்க சந்தோஷச் செலவு செய்வீங்க.

சந்திராஷ்டமம் :அக்டோபர் 29 முதல் 31 வரை

தனுசு

நல்ல செலவுங்க வரும். எனினும் டென்ஷனும் பயமும் மனசில் தேவையே இல்லாமல் வருதே! ஏனுங்க? சில நாட்களாவே நீங்க மனசில் தன்னம்பிக்கை இல்லாம சுத்திக்கிட்டிருக்கீங்க. அதை முதல்ல தூக்கிப் போடுங்க. உங்க வலு உங்களுக்குத் தெரியுமா? அம்மாவுக்கும் அம்மாவாலும் நன்மைகள் ஏற்படுங்க. வாகனம் வாங்கப் போறீங்க. சுலபமாய் லோன் கிடைக்கும். உடல் ஆரோக்யம் சூப்பரா இருக்கும். நண்பர்கள் அபாரமாய் உதவி செய்வாங்க, மனசுக்கு ஆறுதலாவும் செயல்களில் உறுதுணை யாகவும் அதே நண்பர்கள் செயல்படுவாங்க. பேச்சில் கவனமாயிருக்கணும்னு ஒங்களுக்கா தெரியாது? நான் புதுசா சொல்லணுமா என்ன?                                     

சந்திராஷ்டமம்: நவம்பர் 1 முதல் 3 வரை

மகரம்

கல்யாணம் பண்டிகை அது இதுன்னு குடும்பத்தில் குதூகலச் சூழல் அலைமோதும். மனைவியோடு உலகம் சுற்றுவீங்க. ஆரோக்யத்தைக் கொஞ்சம் பார்த்துக்குங்கப்பா. சாப்பாட்டு விஷயத்தில்  கொஞ்சம் தாராளமா இருக்கீங்க. அதைக்கொஞ்சம்  கட்டுப்படுத்தினாலே பாதி பிரசினைங்க ஓவர். வருமானம் ஒரு பக்கம் நல்லபடியா வருமுங்க. கூடவே நிறைய அதிகப்படி வரும்படியும் வரும்படி இருக்கு நிலைமை. என்றைக்கோ கொடுத்து வாராக்கடன் என்று நீங்க தலையைச் சுற்றிக் கிடப்பில் போட்டு நம்பிக்கை இழந்த கடன்கள் இப்போ வசூலாகிச் சந்தோஷ அதிர்ச்சியை மனசுக்கு வழங்கும்.

கும்பம்

நெருங்கிய உறவினர்களால் திடீர் சந்தோஷம் கிடைக்கும். இத்தனை காலம் ஏனோதானோ என்று போய்க்கொண்டிருந்த வாழ்க்கை இப்போ நாலு கால் பாய்ச்சலில் குதிரை கணக்காய் ஓடும். வேலை மாற வேண்டும் என்று கடுமையான அவசியம் நேர்ந்தாலன்றி அது பற்றி யோசிக்காதீங்க. அல்லது உங்கள் ஜோசியதைக் கலந்தாலோசித்து, உங்க தசை புக்தி உதவிகரமா இருந்தால் தைரியமா முடிவெடுங்க. தற்போது உள்ள உத்யோகத்தில் இப்போ வேணும்னா பெரிய முன்னேற்றம் இல்லாதிருக்கலாம். ஆனால் இப்போதைய உங்க உழைப்பெல்லாம் வீணே அல்ல. ஒவ்வொன்றுக்கும் பல மடங்கு பலன் உண்டு. யாரையும் நண்பர்களாய் ஏற்குமுன் பல முறை யோசிங்க.              

மீனம்

சின்னச் சின்னதாய் உடல் நலக்குறைவுகள் இருந்தாலும் பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் கண்ணுக்கெட்டி தூரம் வரை இல்லைங்க. பயம் வேண்டாம். குழந்தை குட்டிங்களோடயும் நெருங்க உறவினர்களோடயும் தொலைதூரப் பயணம் உண்டு. என்ஜாய். தொழில் ரீதியாய் திடீர்னு ஒரு சுறுசுறுப்பு உங்ககிட்ட வரும். எனில் வருமானமும் அதிகரிக்கும். முன்பைவிட இப்போது எதையும் பொறுமையுடன் அணுகுவதால் எல்லா விஷயமும் உங்களுக்குச் சாதகமாய்த்தான் முடியும். உண்மையும் நேர்மையும் எப்பவுமே உங்களுக்கு உண்டு. மனிதநேயமும் மனிதாபிமானமும் உங்க உடன் பிறந்த குணங்கள். இதையெல்லாம் கொஞ்சம் விட்டுக்கொடுக்கற மாதிரி ஏதும் நடந்துச்சுன்னா கவனமாய் அதை விலக்கி உங்க நல்ல குணத்துக்கு என்றைக்கும் பாதிப்பு ஏற்படாதமாதிரி நடந்துக்குங்க.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Patrikai weekly Rasi palan   26.10.2018 to 01.11.2018, வார ராசிபலன்: 26-10-18 முதல் 01-11-18 வரை - வேதா கோபாலன்
-=-