வார ராசிபலன்: 2.07.2021 முதல் 8.7.2021 வரை! வேதாகோபாலன்

Must read

மேஷம்

உடல்நலம் முன்பைவிட நல்லாயிருக்குங்க. உங்க வாழ்க்கைல சில நல்ல செய்திகளையும் பெறுவீங்க. உங்க மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீங்க. ஃபைனான்ஸ் விஷயங்கள்லயும் நல்ல முன்னேற்றம் இருக்குங்க. பணத்தை நீங்க இரட்டிப்பாக்க முடியும். இந்த வாரம் நீங்க பயணத்திலிருந்து பயனடைவீங்க. உங்க பொழுதுபோக்குக்காக அதிகப் பணம் செலவழிப்பீங்க. தட் மீன்ஸ் சூப்பரா செலவு செய்வீங்க. டோன்ட் ஒர்ரி.. நிறையப் பணம் வரவும் செய்யும். உங்களுக்கு ஒரு யோசனை இருக்கும்போது, ​​அதை டிலே செய்யாமல் நிறைவேற்றினால்தான் என்னவாம்? கொஞ்சம் உங்க பணத்தை சேமிப்பதிலும் அக்கறை காட்டுங்கப்பா. நண்பர்களின் நலன் இப்போ உங்களுக்கு மிக முக்கியமானதா இருக்கும். நீங்க மற்றவர்களை வாழ வைப்பதில் அக்கறை காட்டி நிறையப் பாராட்டுப் பெறுவீங்க. உங்க பொறுமை இந்த வாரம் குடும்ப அமைதியை பராமரிக்க உதவும்.  யெஸ். ஷூர்லி.                                             

ரிஷபம்

உங்க முடிவுகளை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள். இந்த வாரம் அலுவலகத்தில் நீங்க விரும்பிய விஷயங்கள் நடக்கும். யாராவது புதிய நபர் உங்களுக்கு நெருக்கமாவாங்க. சிலர் நம்பிக்கையற்றவர்களாக இருக்கக்கூடும். கொஞ்சம் கவனமாக இருங்கள். அவங்களால் உங்களுக்குச் சில சின்னச் சின்னப் பிரச்னை வரக்கூடும். இந்த வாரம் ஸ்டூடன்ட்ஸ்க்கு அதிகம் வெற்றி கெடைக்கும். உங்களுக்குச் சாதகமான நல்ல கிரகங்கள் நல்ல பலன் தரப்போவது உறுதிங்க. ஸ்டூடன்ட்ஸ் கல்விக்காக வெளிநாடு கிளம்ப சான்ஸ் இருக்குப்பா. அதிலும் குறிப்பா நீங்க விரும்பிய பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் சீட் கிடைக்கப் போகுது பாருங்களேன். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டியிருக்கும். தொழில் விருத்தியடையும். வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். யெஸ். குட்.

மிதுனம்

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தடைகளை தாண்டி சாதிப்பீங்க.  பண வருமானம் கூடும்.  பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்னை தீரும்.  கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.  அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனம் எதுவும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் ஒத்திப்போடவும்.  வங்கி சேமிப்பு உயரும். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். வேலையில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் அவசியம். அவசரப்பட்டு வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். கூடுதல் விழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல்.

கடகம்

திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேச வேண்டாம். வியாபாரம் சிறப்படையும். மனதில் குழப்பம் உண்டாகும். இந்த வாரம் அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும். இந்த வாரம் சாதகமாக உள்ளது.  திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். பண பிரச்னைகள் முடிவுக்கு வரும். வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள், வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு எதுவும் முயற்சி செய்ய வேண்டாம்.  வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து மெதுவாக செல்லவும். உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்க பொறுமையும் நிதானமும் தேவை. புதிய முயற்சிகள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். பெஸ்ட் விஷஸ்.

சிம்மம்

விரும்பிய விஷயம் நடைபெறப் பொறுமை தேவை வெற்றிகள் கை கூடி வரும். இந்த வாரம் பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் வைத்துக்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் கவனம் தேவை. இந்த வாரம் சாதகமாக உள்ளது. உறவினர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பண வருமானம் வந்தாலும் சுப காரிய செலவுகள் தேடி வரும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் சிக்கல்கள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கெடைக்கும். வேகமான செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். எந்த செயலையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவது நல்லது உழைப்பு அதிகரிக்கும் உடலில் அசதி கூடும். பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். லாபமும் உண்டு. கங்கிராஜுலேஷன்ஸ்.

சந்திராஷ்டமம் : ஜூன் 30 முதல் ஜூலை 3 வரைகன்னி

உற்சாகமான வாரமாக அமைந்துள்ளது. மனதில் தெளிவு பிறக்கும். இந்த வாரம் வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. காதலிப்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காலமிது. பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாகப் பேசிப் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் நிதானமும் தேவை. ஸ்டூடன்ட்ஸ் புதிய கல்வியை தேர்வு செய்யும் முன்பாக பெற்றோர், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவு செய்யவும். பெண்களுக்கு குடும்பத்தில் சுப விரயம் ஒன்று வரும். பட் டோன்ட் ஒர்ரி  அபவுட் இட்.

சந்திராஷ்டமம் : ஜூலை 3 முதல் ஜூலை 5 வரை

துலாம்

திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசும் போது யோசித்து பேசவும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் வாரமாக அமைந்துள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மன சஞ்சலங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கெடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கவும் கூடும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். வீண் செலவுகள் அதிகரிக்கும். திடீர் திருப்பங்களும் எதிர்பாராத பண வரவும் வரும். வேலையில் உங்களுடைய பொறுப்பை தட்டிக் கழிக்காமல் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருப்பதும் அவசியம். உறவினர்களிடத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம் கோபத்தைக் குறைத்து நிதானமாக பேசவும். குடும்பத்தினரிடம் அனுசரித்து செல்லவும். ப்ளீஸ். யூ ஷுட்.

சந்திராஷ்டமம் : ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை

விருச்சிகம்

அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு வேலையில் திடீர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கெடைக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் லாபம் தரும். வீடு மனை வாங்கும் யோகம் வரும், புதிதாக வண்டி வாகனம் வாங்குவீங்க. நீங்க நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் பேச்சில் இனிமை கூடும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் வரும். வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். திருமண அல்லது அதற்கு இணையான சுப காரியம் தொடர்பாகப் பேசலாம். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வீங்க. இதனால் வீட்டில் நிம்மதி ஏற்படும். தேவை அறிந்து பேசுங்க. அநாவசிய பேச்சுக்களை தவிர்த்து விடுங்க. ப்ளீஸ் அவாய்ட் இட்.

தனுசு:

வேலை செய்யும் இடத்தில் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இளைய சகோதர சகோதரிகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் புதன் இரண்டாம் வீட்டிற்கு மாறுவதால் பேச்சில் தெளிவு பிறக்கும். மதிப்பு மரியாதை கூடும். முயற்சிகளில் வெற்றி கெடைக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி கெடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி கெடைக்கும். நட்பு விசயத்தில் கவனம் தேவை. தொழில் ரீதியான மாற்றங்கள் ஏற்படும் முன்னேற்றம் வரும். கடன் பிரச்னை நீங்கும். செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ற ஆதாயம் கெடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும் கவலைகள் நீங்கி மனமகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் வருமானம் வரும், அதே போல சுப செலவுகளும் வரும் மனதிற்கு சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது. ஹாப்பி. ஹாப்பி.

மகரம்

வேலையில் சிலருக்கு பதவி உயர்வு கெடைக்கும், அலுவலகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கெடைக்கும். உங்களின் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். பேச்சில் சூட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்தவும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரைய ஸ்தானத்தில் உள்ள புதனால் புத்திக் கூர்மை அதிகரிக்கும். குருவின் பார்வை குதூகலத்தைக் கொடுக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருங்கள். காதல் விசயங்கள் கை கூடி வரும் என்றாலும் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்க்கவும். பெண்களுக்கு பொன் நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். அஷ்டமத்து சனியால் தடைகள் வரும் தடைகளை தாண்டி முன்னேற குரு உதவி செய்வார். குரு உங்க ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணம் மன அமைதியை ஏற்படுத்தும் குல தெய்வ அருள் கிடைக்கக் குல தெய்வ கோவிலுக்குச் செல்வீங்க. யூ வில் கோ.

கும்பம்

அப்பாவுக்காகச் செய்யும் செலவுகள் அதிகரிக்கும். அதனால் அவரின் ஆசியைப் பெறுவீங்க. பேச்சில் சூடு அதிகரிக்கும் அதிகாரத்தை கொஞ்சம் குறைக்கவும்.  பண விஷயத்தில் கவனம் தேவை.  தொழில் முதலீடுகளில் லாபம் இரட்டிப்பாகும். வருமானத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் திடீர் இட மாற்றங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து  நல்ல செய்திகள் தேடி வரும்.  வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக இந்த வாரம் முயற்சி செய்யலாம். திடீர் யோகங்கள் வரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு திடீர் நன்மை உண்டு. தந்தைக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன்  அல்லது மனைவியால் உங்களுக்கு நன்மை ஏற்படும். குட்லக்.

மீனம்

பதவி உயர்வு தேடி வரும் வருமானம் அதிகரிக்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை. வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் செய்வது லாபத்தை தரும். தொழில் வியாபாரத்தில் திடீர் லாபம் வரும்.  சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வருமானம் வரும்.  வியாபாரம் விருத்தியாகும் தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். நல்ல ஜாப் கெடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும்  தொழில் கூட்டாளிகளுடன் பேச்சில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. செலவுகளைப் பற்றிய பயம் வேண்டாம். ஏனெனில் ஒவ்வொரு செலவும் மகிழ்ச்சியையும் நன்மையையும் தருவதுடன் சில எக்ஸ்பென்ஸஸ் நீங்க இன்வெஸ்ட் செய்யும் தொகையாகிவிடும். யூ கேன் பி ஹாப்பி.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article