வார ராசிபலன்: 18.2.2022  முதல் 24.2.2022 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

நீங்க எடுத்துக்கிட்ட வெகுகால முயற்சிகள் அவ்வளவும் அதிரடியாப் பணத்தைப் பல மடங்கு கொண்டு வரப்போகிறதுங்க. பணம் பல வழிகளில் வந்தாலும் நல்வழியில் மட்டும் செலவு செய்து பேங்க்கில் இருப்புக்களை அதிகரிச்சுக்குவீங்க. ஏழ்மையில் உள்ளோர், ஆதரவற்றோர் போன்றோர்களின் காவலன் என்று பெயர் எடுப்பதில் பெருமிதம் கொள்வீங்க. ஒரு வேளை நீங்க பிசினஸ் செய்பவர் என்றால், உணவுப் பொருட்கள் உணவகங்கள், எலக்ட்ரானிக்ஸ் துறை மூலம் முழுமையான வருமானத்தை பெற்று மகிழ்வீங்க. தந்தையார் நலனில் கூடுதல் கவனம் தேவை, கண் மற்றும் கை கால்களில் வலி ஏதேனும் ஏற்பட்டாலும், வழி மாறி வந்து விட்டது போல் உடனே சென்று விடும் எதற்கும் பயப்படாதீங்க. ஹெல்த் மகிழ்வான நிலையில் தான் உள்ளது. உடல் வலிமை, கூடும். மனப் பயிற்சி அவசியம், எல்லாம் நல்லதாகவே நடக்கும். ஐ மீன் இட்.

 சந்திராஷ்டமம் : பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 25 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

அரசியல்வாதிகள் போட்டு வைத்த எதிர்கால கனாக்கள் எல்லாம் எப்படி இப்படி நனவானது என நினைத்து, நினைத்து பெருமை கொள்ள வைத்திடும், ஏற்றமான பதவிகள் வந்து மக்கள் செல்வாக்கை மடங்கு கணக்குகளில் கூடுதலாக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். ஒரு வேளை நீங்க அரசியலில் இருக்கறவராக இருந்தால், கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி நெருடல்கள் எல்லாம் மிக எளிதாக தீர்க்கப்பட்டு நிம்மதியடைவீங்க. பணியாளர்கள்: தங்களின் திறமையான செயல்பாடுகள் அதிகாரிகளின் பார்வைக்கு செல்லுவதைப் பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. எனவே உடனே அதற்கு பலனும் கிடைக்கும். உண்மையான பணிபற்று பெருமைகளை நிச்சயம் தேடி தரும். சக ஊழியர்களும் மிக்க இணக்கத்துடன் இருப்பது, மனதிற்கு இதமாக அமைந்திடும். மனதளவில் என்னே உலகம் என விரக்தியுடன் இருந்த உங்கள் நிலைமை முற்றிலும் மாறி மகிழ்ச்சியை பன் மடங்கு வழங்கும் வகையில் மெல்ல வாழ்க்கையில் உயர்வீங்க. யூ வில் ஷ்யூர்லி.

மிதுனம்

கலைத்துறையினருக்கு வரும் காலம் மிகப் பெரிய ‘வசந்த காலமாக’ அமைவதற்கான அறிகுறிகள் இந்த வாரத்திலிருந்தே தெரிய ஆரம்பிச்சுடும். திரைப்பட துறையினரின் திறமைகள் திடீரென வெளிக் கொணரப்பட்டு புதிய ஒப்பந்தங்கள் வந்து மகிழ்வு தரும். மென்மையான மகளிருக்கு இந்த வீக் முழுக்கவே மேன்மையாய் அமைந்திடும். ஸ்டூடன்ட்ஸ் தங்களின் திறனை மேலும் வௌிப்பாடு செய்திடும் வகையில் தரமான கல்வியை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் எளிதில் வந்து சேரலாம். அயல்தேச ‘ஆன்லைன் வகுப்புகள் மூலம் நல்ல விதமாய்க் கற்பீங்க. எட்டாததையும் எட்டிப் பிடித்துக் காட்டும் விடாமுயற்சி உங்களுக்குக் கை கூடும். உங்களைப் பொது வாழ்வில் இணைத்துக் கொள்வதால் புகழும், பொருளும், மக்கள் அபிமானத்தையும் ஒருங்கே பெற்று உயர்வுறுவர் நிச்சயம். பெண்கள்: பிறந்த வீட்டு பெருமைகளை நாசூக்காக புகுந்த வீட்டில் சொல்லி நற்பெயர் பெறுவர். குழந்தைகளால் கூடுதல் மகிழ்ச்சி அடையலாம். விரும்பிய வாகனம், நிலம், புதுமையான பொருட்கள் போன்ற விஷயம் ஏதாவது கிடைப்பதற்குச் சற்று மெனக்கெட வேண்டியிருக்கும். இட்ஸ் ஓகே. ஸோ வாட்?

கடகம்

பொருளாதாரம் பற்றிய முயற்சிகள் படிப்படியான ஏற்றத்தைத் தரும். நீங்க ஆசைப்பட்ட மாதிரி நிரந்தர வருமானத்திற்கு வழியும், புகழையும், செல்வாக்கையும் தந்து மகிழ்விக்கும், அதிரடியாக, பலருக்கு அள்ளி விட்டு அமர்க்களப்படுத்தி அண்டை, அயலாரை விழிபிதுங்க வைத்து தங்கள் பொருளாதார நிலையை காட்டி விடுவீங்க. கையிருப்புகளை பக்குவமாக சேமித்து வைச்சுக்குங்கப்பா. ஏழை, எளியோர், முதியோர்களுக்கு தேவையானவற்றை தெரிந்து ஆர்வத்துடன் அவர்களுக்கு அளித்து அன்பை பெறுவீங்க.  இது கரெக்ட். இதை நிறுத்தாதீங்க. குடும்பத்தில் இத்தனை நாளாய் இருந்து வந்த  தேவையற்ற கருத்து வேறுபாடுகள் மெல்லக் குறையும். பிள்ளைகள் மூலம் கடந்த வாரம் ஏற்பட்ட வீண் செலவுகள் குறையும். பிசினஸில் கூட்டாளிகளை அனுசரித்து நன்மை காண்பீங்க. திடீர் செலவுகள் வருந்தாலும்  அது சந்தோஷம் தரக்கூடிய  சுப காரணங்களுக்காகவே இருக்கும்.  யெஸ். ஹாப்பி ரீஸன்.

சிம்மம்

வீண் விரய செலவுகளை தவிர்ப்பீங்க என்பதால் இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றினாலும் அவற்றை உடனுக்குடன் மறந்து அன்யோன்யத்தை மீட்பீங்க. குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்த்துவிடுவீங்க. வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதி நெருக்கடிகள் நீங்கும். பூர்வீக சொத்து விற்பனை தொடர்பாக நல்ல முன்னேற்றம் காண்பீங்க. பங்குச்சந்தை முதலீடுகள் மகிழத்தக்க லாபத்தைக் கொடுக்கும். மங்கள நிகழ்வுகள்: பல காதல் ஜோடிகளுக்கு ‘பம்பர்’ பரிசு போல பெரியோர்களின் ஆசியும் கிடைத்து திருமணம் வரை சென்று ‘செட்டில்’ ஆகிவிடலாம். ஷ்யூர்லி செட்டிலிங்  ஹாப்பிலி.

கன்னி

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான காலக்கட்டம் இது. புதியதாக சாலை, கட்டிடம், உணவு, சார்ந்த பொருட்களுக்கான ஒப்பந்தங்கள் உயர்வான உங்களின் நடவடிக்கைக்காக அரசாங்கம் வழங்கிடும். பணியாளர்கள் சிறப்பரிய செயல்கள் மூலமாக செய்திடும் வேலைகளில் வெற்றிக்கொடி நாட்டுவர், மேலதிகாரிகளிடம் மிகவும் இணக்கமாக நடந்துகொள்வதால் தனக்கு வேண்டிய காரியங்களுடன் சக ஊழியர்களின் வேலைகளையும் மிகவும் எளிதில் முடித்து நற்பெயர் பெறுவர். நல்ல மனநிலையும், வளமான உடல்நிலையும் மனதளவில் ‘லாட்டரி’ அடித்தது போன்ற மகிழ்வினை தரும், ஒவ்வாமை மட்டும் ஒரு சில நேரம் வந்து போகும். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீங்க. தொழில் பிசினஸில் புதிய கூட்டாளிகள் இணைவாங்க. வேலை செய்யும் இடத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும். யெஸ். வெரி மச்.

துலாம்

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீங்க. குடும்பத்தில் தம்பதியர் தொழில் அதிபர்கள் புதிய ஒப்பந்தங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் ஏற்கனவே  முயற்சித்தவைகளை முடித்துக் காட்டும் நேரம் இது வெளிநாட்டு வர்த்தகங்களில் நீங்க அக்கறை காட்டலாம். குடும்பத்தினரிடையே பாசமும் நெருக்கமும் கூடும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  இக்காலக் கட்டங்களில் எடுக்கும் அதிகமான முயற்சிகள் எதிர் காலத்தில் வெகுவான உயர்வுக்கு காரணமாக அமைந்திடும். வெளிநாட்டு வாய்ப்புகள் மிக விரைவில் வரலாம். அரசாங்க பாராட்டுகளுக்கு எதிர்பார்த்து மாறிப் போகலாம். இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு அனாவசிய செலவுகளை குறைத்து கொள்வது நலம். அதிகாரிகளுக்கே ஆலோசனைகள் கூறி, அவர்களின் பாராட்டைப் பெற்று, உங்களது புகழை உயர்த்திக்கொள்வீங்க. யெஸ். இன்கிரீஸிங் த ஃபேம்.

விருச்சிகம்

மனதில் துணிச்சல் உண்டாகும். விண்ணப்பித்து விளையாட்டுக் காட்டிய பல விசயங்கள் தானாக கனிந்து வரும். எனவே பணியில் இருக்கும் அரசாங்க, தனியார் ஊழியர்களுக்கு வளமான எதிர்காலம் மெல்லத் தீர்மானிக்கப்படும். பெரியோர்களின் நலன் நல்ல நிலையில் செயல்படும். திட்டமிட்ட உணவுகளால் திடமான உடல் வலிமையைப் பெறமுடியும் என்பதை உணரும் நேரம் இது. கலைத்துறையினர்: வரும் காலம் வளமானதாக அமைந்திடும். திரைப்படம், தொலைக்காட்சி கட்டிடக் கலை போன்ற துறையினர் பாராட்டுக்களையும், பணத்தையும சற்றாவது பெறுவீங்க. இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். பிசினஸ் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க கடன் வாங்குவீங்க. உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். தாங்க் காட்.

தனுசு

பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வாங்க. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. எடுத்த காரியங்களில் எந்த தடையும் இல்லாமல் செயலுக்கு வந்து மகிழ்வூட்டும். பெண் கலைஞர்களின் பொற்காலம் இதுதான், அதிகமான ரசிகர்களின் ‘லைக்குகளால்’ லைஃப் ஸ்டைலே மாறி விடும். அந்த அளவிற்கு தங்கள் தனித் திறமையை வெளிப்பாடு செய்வீங்க. மாணவர்கள்: எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி, தூதரக கல்வி, சிவில், மற்றும் பொறியியல், அழகு கலை முடித்தவர்கள் பதவிகளைப் பிடித்து பண பலனை பெற சரியான நேரம் இது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உறவினர்கள் உதவியால் கடன் பிரச்சினை குறையும். யெஸ். வில் பி வெரி மச் ரெட்யூஸ்ட்.

மகரம்

பிசினஸில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். பணிபுரிவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து நற்பெயர் பெறுவீங்க ஸ்டூடன்ட்ஸ் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிஞ்சுக்க ஆரம்பிப்பீங்க. வீட்ல ஹாப்பியான சம்பவங்கள் நடைபெறும். தொழில் பிசினஸில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவாங்க. மேரேஜ் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நல்ல செய்தி வீடு தேடி வரும். சிலருக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேண்டி விரும்பி காத்திருந்த வாகனமும், வீடு கட்ட நினைத்தவர்களுக்கு அந்த அதிர்ஷ்டமும், புதுமை பொருட்களை வாங்கி குவிப்பதுமாக ஒரே குதூகலம்தான். கிரேட் ஹாப்பினஸ்.

கும்பம்

பார்த்துக்கொண்டிருக்கும் பணி அப்படியே வேறு துறைக்கு மாற்றி விடலாம் அதுவும் பெரிய நன்மையாகவே முடியும் புதிய  முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். குடும்பத்தினரும் மிகவும் ஒற்றுமையுடன் நடந்து மகிழ்ச்சியை தருவர். பூர்வீக சொத்துக்கள் கூட வந்து தகுதியை உயர்த்த வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கை பிடிக்க கனவுக்கண்ட காதலர்களுக்கு தங்கள் எண்ணங்கள் ஈடேறும் காலம் வந்து விட்டது எனலாம். தாய்வழி உறவுகள் மிகவும் அன்யோன்யமாக வந்து நட்பு காட்டுவர், புதிய வாகனம், ஜவுளி, நகை போன்றவைகளை வாங்கி மகிழ்ச்சி அடையலாம். சில உறவினருக்கு உதவி செய்து நீங்க யார் என்பதை நிரூபிப்பீங்க. யெஸ்.. யூ வில் ப்ரூவ்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 21 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மீனம்

கடந்த இரண்டு வாரங்களாக இருந்த மன உளைச்சல் நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் முன்னேற்றமும், கேட்ட இடத்திற்கு மாற்றங்களும் கிடைக்கும். தொழில் பிசினஸில் லாபம் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் சிறு தடைகள் ஏற்பட்டு அவை இந்த வாரமே நீங்கி நிம்மதி அளிக்கும். செலவுகள் நல்ல செலவுகளாகவே இருக்கும். வாகனம் வாங்கும் முயற்சி நல்ல விதமாக நிறைவேறும். தாயாருக்கு இருந்து வந்த சுகவீனங்கள் மறையும். ஸ்டூடன்ட்ஸ்க்கு சூப்பர் வாரம். ஆபீஸில் வேலை பார்ப்போருக்கு சற்று நிதானப்போக்கு நிலவும் என்றாலும் வருத்தங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை குடும்பம் சந்தோஷமா இருக்கும். யெஸ். வெரி மச் ஹாப்பி.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை/சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article