வெள்ளத்தில் பாஸ்போர்டை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட் வழங்கப்படும் – சுஷ்மா சுவராஜ்

கேரள மாநில வெள்ளத்தில் பாஸ்போர்ட்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட் வழங்கப்படும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். தேவை உடையவர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

kerala

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள ஐம்பதாயிரம் வீடுகள் சேதமடைந்தன. 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிவதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கு கிட்டத்தட்ட 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன.

மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல லட்சம் மக்கள் உடுத்த ஆடைகள் கூட இன்றி நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாநில அரசு மற்றும் பிற தன்னார்வலர்கள் சார்பில் உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார். அதன்பின்னர் கேரள அரசிற்கு 100 கோடி நிதியை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக கட்டணமின்றி மாற்று பாஸ்போர்ட்கள் வழங்கப்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் தனது டிவிட்டர் பதிவில் “ கேரள மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்தினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளார். அங்கு நிலைமை சீரடைந்தது வெள்ள நீரில் நனைந்து சேதமடைந்த பாஸ்போர்ட்களுக்கு பதிலாக புதிய பாஸ்போர்கள் கட்டணமின்றி வழங்க தீர்மானித்துள்ளோம். தேவை உடையவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் “ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-