ராய்பூர்:
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய இளைஞர்களுக்கு சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து ஒன்றில் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த பணத்தைக்கொண்டு அந்த கிராம மக்களுக்கு கறிவிருந்து போடும்படியும் வினோத தீர்ப்பை வழங்கி உள்ளது. இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
சத்திஸ்கர் மாநிலத்தில் ஜஷ்பூர் என்னும் மலைவாழ் கிராமம் உள்ளது. இங்குள்ள் மலைவாழ் பெண் மற்றும் 2 சிறுமிகளை கடந்த 5-ம் தேதி அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த மலைவாழ் மக்கள் அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்தில் முறையிட்டு உள்ளது.
இந்த விசாரித்த அந்த கிராம பஞ்சாயத்தார், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் உள்பட 3 பெண்களுக்கும், பாலியல் செய்த இளைஞர்கள் 3 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்த பணத்தில் அந்த மலைவாழ் சமூகத்தை சேர்ந்த 45 பேருக்கு ஆட்டுக் கறி விருந்து போட வேண்டும் என்றும் வினோத தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இதையடுத்து, அந்த அக்கிராமத்தை சேர்ந்த 45 பேருக்கு விருந்து அளிக்கப்பட்ட தாகவும், இந்த பாலியல் வழக்கு காவல் துறையிடம் செல்லாத அளவுக்கு இரண்டு தரப்பினரிடம் சமரசமாக பேசி தீர்க்கப்பட்டகதாகவும் கூறப்படுகிறது.
குற்றவாளிகளான 3 இளைஞர்களை தப்பிக்க வைக்கும் நோக்கில், கிராம பஞ்சாயத்தார் இந்த , வினோத தீர்ப்பை வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்கள் கிராம பஞ்சாயத்தாருக்கு அஞ்சி காவல் துறையில் புகார் கொடுக்க மறுத்துவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், அந்த கிராமத்தில் காவல் துறையினர் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.