டில்லி,

ருடத்திற்கு  ரூ 20 லட்சம் வரவு-செலவு செய்யும்  நிறுவனங்களுக்கு பான் எண் கட்டாயம் தேவை என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டன்ஓவர் செய்யும் நிறுவனங்கள் பான் எண்ணை கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று  வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.

புதிய நிறுவனங்களைப் பதிவு செய்யும் போது இது கட்டாயமில்லை என்றும், ஆனால்  ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களில் ஆண்டுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கணக்குத் தாக்கல் செய்யும் நிறுவனம் என்றால் பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

கூட்டுறவு அமைப்புகள், அறக்கட்டளைகள், சமூகத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வரும்  ஜூலை மாதம் ஜி.எஸ்.டி சட்டம் அமலுக்கு வர உள்ள நிலையில் அதையடுத்து இரண்டு மாதங்களுக்குள் இத்திட்டம் அமலுக்கு வருகிறது.

சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பான் , ஆதார் எண்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சார்ட்டர்ட் கணக்கர் சான்றிதழையும் பொது டெண்டர்களில் பங்கேற்கும்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது