ஆச்சாரமான பிராமணர் என்பதா?: விஜய்மல்லையாவுக்கு பிராமண சங்கம் கண்டனம்

ச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவராக தன்னை விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளதற்கு பிராமண சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி கடனை பெற்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. அதை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு  பிரிட்டனுக்கு ஓடிவிட்டார். அங்கு கடந்த  2016-ஆம் ஆண்டுமுதல் வசித்து வருகிறார்.

அவரை பிரிட்டன் அரசு உதவியுடன் பிடித்துக் கொண்டுவந்து சிறையில் அடைக்க இந்திய அரசு முயற்சித்தது.  ஆனால் விஜய் மல்லையாவின் வழக்கறிஞர்கள் லண்டன் நீதிமன்றத்தில், “இந்திய சிறைச் சாலைகள் சுத்தமாக இருக்காது” என்று வாதிட்டனர்.

விஜய்மல்லையா

இதனால் விஜய் மல்லையாவை அடைக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ள மும்பை சிறையில் செய்யப்பட்டுள்ள வசதிகளை இந்திய அரசு வீடியோவாக எடுத்து லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

“கோடி கோடியாய் ஏமாற்றி நாட்டைவிட்டு ஓடிய குற்றவாளிக்கு இத்தனை வசதியான சிறையா” என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இதற்கிடையே “இந்திய சிறையில் தனக்கு வசதிகள் வேண்டும்” என்று லண்டன் நீதிமன்றத்தில் விஜய்மல்லையா தாக்கல் செய்த மனுவில், “நான் ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகவே எனக்கு சுத்தமான சிறை வேண்டும்” என்று குறிப்பிட்டதும் சர்ச்சையாகி இருக்கிறது.

“விஜய்மல்லையா ஒரு மோசடி பேர்வழி. இங்கு மக்கள் பணத்தை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியவர். பெண்களுடன் ஆபாசமாக உடை அணிந்து போஸ் கொடுத்திருப்பவர்.. மது குடிப்பவர்.. குடிப்பதையே போஸ் கொடுப்பவர். அவர் தன்னை ஆசாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவன் என்று சொல்லிக்கொள்வதா” என்று சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

பம்மல் ராமகிருஷ்ணன்

இது குறித்து பதிவு செய்யப்பட்ட பிராமண (தாம்ப்ராஸ்) சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணனை தொடர்புகொண்டு கேட்டோம். அவர், ம்மிடம், “விஜய்மல்லயா அப்படிக் கூறியதை கண்டிக்கிறோம். அவரை நாங்கள் பிராமணராகவே ஏற்கவில்லை” என்றார் காட்டமாக.

வரதராஜன்

அதே போல தாம்ப்ராஸ் அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் வரதராஜன், “விஜய்மல்லையா ஒரு மோசடி பேர்வழி. அவரது நடவடிக்கைகள் எவ்வளவு மோசமானவை என்பது அனைவருக்கும் தெரியும். . அவர் தன்னை ஆசாரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Orthodox brahmin issue brahmin's association condem to vijay mallaya, ஆச்சாரமான பிராமணர் என்பதா?: விஜய்மல்லையாவுக்கு பிராமண சங்கம் கண்டனம்
-=-