ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி இன்றஉ காலை பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர்  பன்னீர் செல்வம்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள்  குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும் என்றால், காட்சி விலங்குகள் பட்டியிலில் இருந்து காளையை நீக்க அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.  இதற்கு அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் இன்று அமைச்சரவை கூட வாய்ப்பு இல்லை என்றும், உச்சநீதிமன்றத்தையும் இது குறித்து விரைவுபடுத்தி தீர்ப்பு பெற முடியாது என்றும் மோடி ஓ.பி.எஸ்ஸிடம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆகவே ஜல்லிக்கட்டு குறித்த நல்ல தகவல் ஏதும் இன்று வர வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.   ஆக, அ.தி.மு.க. எம்.பிக்கள் முயன்றும் பிரதமர் மோடியை சந்திக்க முடியாத நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ் சந்தித்துவிட்டார். ஆனால் பலன் ஏதும் இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.