சென்னை: அதிமுகவின்பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெற உழைப்போம் என ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக எடப்பாடியிடம் ஓபிஎஸ் சரண் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிமுகவில் மொத்தமுள்ள 2,665 பொதுக்குழு உறுப்பினர்கைளில்,  2,450க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு உள்ளதால், அவர் அறிவித்துள்ள வேட்பாளருக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தனது முடிவில் இருந்து ஓபிஎஸ் பின்வாங்கி உள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் வேட்பாளரை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே  அதிமுக சார்பில் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டு தரப்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.   இதைத்தொடர்ந்து, அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக வேட்பாளராக தென்னரசு நிற்பார் என்றும்ட, அதற்கு  பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என  வலியுறுத்தியதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும், அது தொடர்பான கடிதத்தையும் அனுப்பினார். இந்த  ஒப்புதல் கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்க அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் எடப்பாடி தரப்பு வேட்பாளர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

இதையடுத்து,  பழனிசாமி தரப்பு வேட்பாளரை ஆதரிக்குமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன்  ஆலோசனை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அறிவிக்கப்பட்டுள்ள ஒபிஎஸ் தரப்பு வேட்பாளர்  வாபஸ் பெற உள்ளார்.

இந்த நிலையில்,  அதிமுக பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெற உழைப்போம் என ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் திமுகவுக்கு 125 இடங்களும்  கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களும், மற்ற கட்சிகளக்கு 26 இடங்களும் உள்ளன.  அதிமுகவுக்கு மட்டுமே 65 இடங்கள் உள்ளன. இதில் எடப்பாடி ஓபிஎஸ் என இரு பிரிவாகளாக பிரிந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு 61 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளன. ஆனால், ஓபிஎஸ்-க்கு அவரையும் சேர்த்து 4 பேர் மட்டுமே உள்ளனர். 

அதுபோல,  அதிமுகவில் உள்ள மொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,665. இதில் 2,450க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கே உள்ளது. இதனால், அவரது வேட்பாளருக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. மேலும், தற்போதைய நிலவரப்படி, எடப்பாடி தரப்பே வெற்றிபெறும்நிலை மீண்டும் உருவாகி உள்ளது.

இதனால்,  ஓபிஎஸ், தனது வேட்பாளரை வாபஸ் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பாக இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்,  , இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் ஆதரிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின்பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் வெற்றி பெற உழைப்போம் என ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிட்டாலும் ஆதரிப்போம் என ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.  உச்சநீதிமன்ற உத்தரவால் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்? ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசு மட்டுமே போட்டி…