கோவை:

மிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் (பிப். 14) நள்ளிரவு மீண்டும் தியானத்தில் ஈடுபட்டார்.

கோவை அருகே உள்ள ஈஸா மையத்தில் அதன் நிறுவனர் ஜத்குரு ஜகி வாசுதேவ் தலைமையில் நேற்று முன்தினம் மாலை மகா சிவராத்திரி விழா துவங்கியது.

இந்நிகழ்வில் தமிழக ஆளுநர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தமிழ், இந்தி உட்பட பல மொழிப்பாடல்கள் இரவு முழுதும் இசைக்கப்பட்டன. இடையில் 11.30 மணிக்கு ஜகி வாசுதேவ், ஓம் நமசிவாய’ என்று முழங்க.. கூட்டத்தினர் கண்மூடி திருப்பி ச்சொன்னார்கள். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கண்மூடி அமைதியாக தியானம் இருந்தார்.

முதல்வர் பொறுப்பில் இருந்த ஓ.பி.எஸ்., ஜெயலலிதா சமாதியில் தியானம் இருந்ததும் பிறகு வி.கே.சசிகலா மீது குற்றச்சாட்டுக்களை வீசியதும் அதையடுத்து அதிமுக பிளவுபட்டதும் அனைவரும் அறிந்ததே.

ஆனால் நேற்றைய ஓ.பி.எஸ்.ஸின் தியானம் அப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது