முத்தலாக் எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளி: மாநிலங்களவை நாளைமறுதினம் வரை ஒத்திவைப்பு

டில்லி:

மாநிலங்களையில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்,  எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக  முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்ய முடியவில்லை. இதையடுத்து மாநிலங்களவை  நாளை மறுநாள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

திருத்தப்பட்ட புதிய முத்தலாக் மசோதா கடும் அமளிகளுக்கு இடையே பாராளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்போவதாக அமைச்சர் ரவிசங்கர் கூறியிருந்தார்.

இதற்கிடையில், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்ற ஆதரவு தர மாட்டோம் என்று குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள் இன்றுகாலை குலாம்நபி ஆசாத் தலைமையில் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து,  முத்தலாக் மசோதாவை தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யின் தீர்மானத்திற்கு, அதிமுக, திமுக உள்ளிட்ட 11 கட்சிகள் கையெழுத்திட்டு மாநிலங்களவையில் வழங்கியது.

இந்த நிலையில் முதலாக் மசோதாவை தாக்கல் செய்ய பாஜக அரசு முயற்சி மேற்கொண்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மசோதாவை தாக்கல் செய்யாத முடியாத சூழல் எழுந்தது. இதையடுத்து, மாநிலங்களவையை முதலில் மதியம் 2 மணி வரை ஒத்தி வைத்த மாநிலங்களவை தலைவர், பின்னர் பிற்பகலிலும் அமளி நீடித்ததால், அவையை நாளை மறுதினம் வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 11 parties petition, 11 கட்சிகள் மனு, against the Muthalaq Bill, discussion with opposition leaders, Ghulam Nabi Azad, New Muthalaq Bill, Opposition MPs Uproar, Rajya Sabha, Rajya Sabha Adjournment, Triple Talaq, TripleTalaqBill, Union Minister Ravi Shankar, எதிர்க்கட்சிகள் ஆலோசனை, எதிர்க்கட்சியினர் அமளி, மாநிலங்களவை ஒத்திவைப்பு, மாநிலங்களவையில் தாக்கல், முத்தலாக் மசோதா
-=-