மருத்துவப் படிப்பை நிர்ணயம் செய்வது இட ஒதுக்கீடு இல்லை, பணம் மட்டுமே

டில்லி

ருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடப்பது பணத்தினால் மட்டுமே அன்றி இட ஒதுக்கிட்டால் இல்லை என தெரிய வந்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் சேர நீட் அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.   அதனால் சாதி வாரியான ஒதுக்கீடு குறைந்துள்ளதாக பலர் குறை கூறுகின்றனர்.   அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதினாலும் சாதி வாரியான இட ஒதுக்கீட்டினால் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் மருத்துவக் கல்வி பயில இடம் கிடைப்பதில்லை என வேறு சிலர் குறை கூறுகின்றனர்.   உண்மை நிலை என்பதை நாம் பார்ப்போமா?

மருத்துவக் கல்லூரியில் சேர நீட் மூலம் அரசு ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படுகின்றன.   அதில் 39000 இடங்கள் நிரப்பப் படுகின்றன.  மீதமுள்ள சுமார் 17000க்கு மேற்பட்ட இடங்கள் நிர்வாகம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியருக்கான இடங்கள் ஆகும்.

கடந்த வருடம் சுமார் 57000 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.   இவர்களின் சராசரி நீட் மதிப்பெண்கள் 448/720  ஆகும்.  இதில் சாதி வாரியான ஒதுக்கீட்டில் அரசு கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் சராசரி மதிப்பென் 398 ஆக உள்ளது.  தனியார் கல்லூரிகளில் இதே சாதி வாரி ஒதுக்கீட்டாளர்களின் சராசரி மதிப்பெண்கல் 367 ஆக உள்ளது.

அதே நேரத்தில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சராசரி மதிப்பெண்கள் வெறும் 306 ஆக உள்ளது.  இவர்கள் அனைவரும் டொனேஷன் மற்றும் அதிகக் கல்விக் கட்டணம் கொடுத்து மருத்துவக் கல்வி பயில்பவர்களே ஆகும்

இதன் மூலம் நீட் தேர்வு மதிப்பெண்களோ அல்லது சாதி வாரியான இட ஒதுக்கீடோ மருத்துவக் கல்வியில் அதிக தாக்கம் ஏற்படுத்த வில்லை என்பது தெரிய வந்துள்ளது.   நீட் மதிப்பெண்கள் அதிகம் என்றால் கல்விக் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதும் நீட்  மதிப்பெண்கள் குறைந்தாலும் அதிகக் கல்வி கட்டணத்தில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெறலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

நீட் தேர்வு மதிப்பெண்கள் குறைவதால் மருத்துவக் கல்லூரியில் சேர இயலாமல் உள்ள நிலை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Only money but not reservation plays major part in medical admissions
-=-