பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புதிய வழக்கு

சென்னை

வர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சீனிவாசன் மீது ஒரு புதிய வழக்கு பதியப்பட்டுள்ளது.

அக்குபஞ்சர் மருத்துவரான டாக்டர் சீனிவாசன் தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகரும் ஆவார்.   இவர் வைத்துக் கொண்ட பவர்ஸ்டார் என்னும் பெயர் ரசிகர்களிடையே பிரபலமாக உஸ்ளது.   இவர் திரையுலகில் மட்டுமின்றி சிறை உலகிலும் புகழ் பெற்றவர் ஆவார்.  இவர் மீது பல வழக்குகள் போடப்பட்டு பல முறை சிறை சென்றுள்ளார்.

சென்னை புதிய வண்ணாரப்பேட்டையில் வசிப்பவர் தயாநிதி.   இவர் கார் ஓட்டுனராக பணி புரிகிறார்.   இவருக்கு திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இருந்தது.   அதனால் அவர் சீனிவாசனை அணுகி வாய்ப்பு கேட்டுள்ளார்.  பவர் ஸ்டார் சீனிவாசன் அவரிடம், “திரைப்படத்தில் வாய்ப்பு கிடைப்பது கடினமானது.   நான் உனக்கு ரூ.30 லட்சம் கடனை குறைந்த வட்டிக்கு வாங்கித் தருகிறேன்.  அதைக் கொண்டு நீ ஏதாவது தொழில் செய்யலாம்” என கூறி உள்ளார்.

அதை ஒப்புக் கொண்ட தயாநிதியிடம்  கடனுக்கு ஏற்பாடு செய்ய சீனிவாசன் ரூ.18000 கமிஷன் வாங்கி உள்ளார்.    ஆனல்  கடன் வாங்கித் தராமல் ஏமாற்றியதால் ஆத்திரம் அடைந்த தயாநிதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்..   தற்போது உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையினர் பவர் ஸ்டார் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

Tags: One more case booked against Power star srinivasan