அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினர் மீது துப்பாக்கி தாக்குதல் !

Must read

ஜார்ஜியா, அமெரிக்கா

மெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் இந்திய வம்சாவழியினர் இருவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடந்ததில் ஒரு மரணம் அடைந்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாவட்டத்தில் உள்ள பர்னெட் பெரி சாலை என்னும் இடத்தில் பரம்ஜித் சிங் வசித்து வருகிறார்.  இந்திய வம்சா வழியினரான இவர் இங்கு ஒரு சூப்பர் மார்கெட் நடத்தி வருகிறார்.    அவர் தனது சூப்பர் மார்கெட்டில் வணிகத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு நுழைந்த ஒரு அமெரிக்கர் பரம்ஜித் சிங்கை துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார்.

படுகாயம் அடைந்த பரம்ஜித் அங்கேயே மரணம் அடைந்தார்.   அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு அருகில் மற்றொரு இந்திய வம்சாவழியினரான பர்தே படேல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.   பரம்ஜித் சிங்கை சுட்டுக் கொன்ற அதே நபர் அந்தக் கடைக்கும் சென்று பர்தே படேலையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் படேல் படுகாயம் அடைந்துள்ளார்.

சிசிடிவி காமிரா மூலம் போலீசார் துப்பாக்கியால் சுட்டவர் ரஷத் நிகொல்சன் என கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர்.   இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.   காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வு அங்குள்ள இந்திய வம்சாவழியினர் இடையே பதட்டத்தை உருவாக்கி உள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article