காஷ்மீர்: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா பங்கேற்றார். ஏற்கனவே முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பங்கேற்ற நிலையில், தற்போது உமர் அப்துல்லா பங்கேற்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், ராகுலின் யாத்திரை தனி நபருக்காக அல்ல; நாட்டின் நிலைமையை மேம்படுத்த நடைபெறுகிறது என்று கூறினார்.

 இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி இன்று காஷ்மீரில் தனது பயணத்தை தொடங்கினார். பனிஹல் என்ற இடத்தில் தொடங்கிய பேரணியில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் பங்கேற்றார். ஜம்முவில் ராகுல் நடைப்பயணத்தில் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவும் பங்கேற்றார்.

ராகுலின் யாத்திரை கடந்த 19-ந் தேதி காஷ்மீருக்குள் நுழைந்த நிலையில், கடந்த் 25ந்தேதி,  காஷ்மீரின் ராம்பன் பகுதியிலிருந்து தொடங்கியது பனிஹால் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கனமழை காரணமாக அந்த சாலை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இருந்தாலும் ராகுல் தொடர்ந்து,  கொட்டும் மழையில்  பனிஹால் நகரம் நோக்கி யாத்திரை மேற்கொண்டார். அப்போது, சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதையடுத்து, ராகுலின் யாத்தி ரத்து செய்யப்பட்து. தொடர்ந்து, இன்று மாலை நடைபெற இருந்த ராகுல்காந்தியின் நடைப்பயணமும், நாளை (26ந்தேதி) நடை பயணமும் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இன்று காலை  8 மணிக்கு பனிஹால் பகுதியில் மீண்டும் நடைப்பயணம் தொடங்கியது.  ஸ்ரீநகரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த நெடுஞ்சாலை நகரத்திற்கு வந்தபோது  இன்றைய யாத்திரையில், முன்னாள் முதல்வரும்,  தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா கலந்துகொண்டார். சிறிது நேரம் ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, இதன் காரணமாக, நாட்டின் சூழ்நிலையையும் சூழலையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த அணிவகுப்பில் பங்கேற்றதாக தெரிவித்தவர், பாரத் ஜோடோ யாத்திரை ஒரு தனிநபரின் இமேஜை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவில்லை, “பாரத் ஜோடோ யாத்ரா ராகுல் காந்தியின் இமேஜை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதாகும்.

தனி நபரின் இமேஜுக்காக இதில் சேரவில்லை, மாவட்டத்தின் இமேஜுக்காக நாங்கள் இணைந்துள்ளோம் என்றார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, அதுபற்றி ஆராய விரும்பவில்லை என்றார்.

ராகுல் காந்தி “தனிப்பட்ட காரணங்களுக்காக” யாத்திரையை நடத்தவில்லை என்றும், நாட்டில் வகுப்புவாத பதட்டங்களை உருவாக்கி சிறுபான்மையினரை குறிவைக்கும் முயற்சிகள் குறித்த தனது அக்கறையின் காரணமாக மட்டுமே என்றவர்,  “இந்த அரசாங்கம் அரபு நாடுகளுடன் நட்பு கொள்கிறது, ஆனால் இந்த அரசாங்கத்தில் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்பதே உண்மை” என்று அவர் கூறினார்.

“சுதந்திரத்திற்குப் பிறகு ஆளும் கட்சிக்கு முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் — மக்களவை அல்லது ராஜ்யசபாவில் — இல்லாதது இதுவே முதல் முறையாக இருக்கலாம். இது அவர்களின் அணுகுமுறையைக் காட்டுகிறது” என்றவர்,  சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்துல்லா, ஜே & கேவின் அரசியல் தலைவர்கள் 370 வது பிரிவை மீட்டெடுப்பதற்கான வழக்கை நீதிமன்றத்தில் போராடுவார்கள் என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்த கேள்விக்கு, அதுதொடர்பாக மத்தியஅரசு அறிவித்து  உமர் அப்துல்லாவும் தனது கவலையை எழுப்பி, “எட்டு வருடங்கள் ஆகிறது” என்றார்.

“கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் நடந்த இரண்டு தேர்தல்களுக்கு இடையே இதுவே மிக நீண்ட காலமாகும். தீவிரவாதத்தின் உச்சக்கட்டத்தில் கூட அப்படி இல்லை” என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் தேர்தலுக்கு பிச்சை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் விரும்புகிறது என்று குற்றம் சாட்டியவர்,  “நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, அதற்காக பிச்சை எடுக்க மாட்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இன்று மாலை  காஷ்மீர் பள்ளத்தாக்கில் நுழையும்,  தொடர்ந்து,  ஜனவரி 30 அன்று ஸ்ரீநகரில் பேரணியில் முடிவடையும்.

ஜம்முவில் ராகுலின் யாத்திரை ல்வேறு மாவட்டங்கள் வழியாகச் சென்று கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர்களைக் கடந்துள்ளது.