ஓபிஎஸ்- சந்திரபாபுநாயுடு பேச்சுவார்த்தை வெற்றி

சென்னை,

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசினார்.

கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திரா சென்றார்.
இன்று மதியம் விஜயவாடா சென்றடைந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆந்திர மாநில அமைச்சர் வேலகபாடி வரவேற்றார்.

இன்று பிற்பகல் அமராவதியில் நடைபெற்ற ஆந்திர முதல்வருடனான பேச்சுவார்த்தையின்போது, தமிழக தண்ணீர் தேவை குறித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விரிவாக சந்திரபாபு நாயுடுவுக்கு எடுத்துரைத்தார்.
அதைத்தொடர்ந்து மேலும் 2.5 டிஎம்சி தண்ணீர் தர சந்திரபாபு நாயுடு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றிருந்தனர்.

ஏற்கனவே கடந்த வாரம் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடும்படி ஆந்திர முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.