நியூயார்க்:
மெரிக்காவில் வெளிவந்துள்ள புதுமையான வேலைவாய்ப்பு விளம்பரம் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக எலி தொல்லை அதிகமாகி வருகிறது என்றும் அதனால் எலியை கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எலிகளை கொன்று அவற்றை அப்புறப்படுத்த வேலைக்கு ஆட்கள் தேவை என அமெரிக்காவில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எலிகளை கொல்வதற்காகவே தனி வேலைவாய்ப்பை அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகர நிர்வாகம் விளம்பரம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வேலைகள் செய்பவர்கள் எலிகளை கட்டுப்படுத்தவும் அவற்றை கொன்று அப்புறப்படுத்தும் வேலையை செய்ய வேண்டும் என்றும் இந்த வேலையில் சேர ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி எலிகளை துரத்தி கொல்வதற்கு நல்ல உடல் ஆற்றல் வேண்டும் என்றும் கொலை செய்வதற்கான உள்ளுணர்வு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படுவோருக்கு ரூ.11 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக எலித்தொல்லை அதிகரிப்பதன் காரணமாக நியூயார்க் நகர நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.