ஜெய்ப்பூர்:
 
பிரதமர் மோடி அறிவித்த “நோட்டு செல்லாது” அறிவிப்பால் உள்நாட்டு மக்கள் வங்கி, அஞ்சலகம், ஏ.டி.எம். வரிசையில் நிற்கின்றனர். அப்படியும் பணம் கிடைக்காமல் பரிதவித்து நிற்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தியா வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தெருக்களில் பிச்சையெடுக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
0
ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த இரண்டு குழுக்களைச் சேர்ந்தலக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்திருக்கிறார்கள். “நோட்டு செல்லாது”  அறிவிப்பால் பணத்துக்கு திண்டாடினர். வேறுவழியில்லாத இந்த பயணிகள், ராஜஸ்தான் மாநிலம் புஸ்கர் நகரில் உள்ள பிரம்மா கோயில் அருகே வித்தை காட்டி பிச்சை எடுக்க முடிவு செய்தனர்.
ஆண்கள் இசைக் கருவிகளை வாசிக்க, பெண்கள் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் காண்பித்து  பிச்சை எடுத்தனர்.
 
தங்களுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வங்கியிலிருந்தும் ஏடிஎம்மிலிருந்தும் எடுக்க முடியாததால் இப்படியான ‘முயற்சி’ என ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லிக்குச் செல்ல பணம் திரட்டி தங்கள் நாட்டு தூதரங்களிடம் உதவி கோர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Share this: