சென்னை

ரேஷனில் உளுத்தம்பருப்பு வழங்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது.   இன்றைய கூட்டத்தின் போது கேள்வி நேரத்தில் சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் மா சுப்ரமணியன் ரேஷனில் உளுத்தம் பருப்பு வழங்காதது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, “தற்போது ஒரு கோடியே 92 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப் படுகின்றன.  வெளிச்சந்தையில் தற்போது உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ரூ. 170க்கு விற்கப்படுகிறது.    மத்திய அரசு உளுத்தம் பருப்புக்கான மானியத்தை முழுவதுமாக நிறுத்தி விட்டது.    உளுத்தம் பருப்பு வழங்கினால் அரசுக்கு ரூ.207 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.   அதனால் ரேஷன் கடைகளில் உளுத்தம் பருப்பு வழங்க முடியாது.”  என பதில் அளித்தார்.