சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பாளராகவும், விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சினிமா தொடர்பாக இனிமேல்  யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளார்.

திமுகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி, சினிமா தயாரிப்பு , விநியோகம்  மட்டுமின்றி சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். சிறிது சிறிதாக திரையுலக்குள் புகுந்த உதயநிதி தற்போது தமிழ்நாட்டின் திரையுலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இதனால்  சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது.

2021சட்டமன்ற போட்டியிட்டு உதயநிதி எம். எல். ஏ ஆனதுடன் தற்போது அமைச்சராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளதால், திரையுலகை சேர்ந்த பலர் அவர் புராணம் பாடி வருகின்றனர். பலர் அவர்மூலம் காரியங்களை சாதித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால், அவர் அமைச்சரானதும், திரையுலக பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார்.  ஆனாலும் திரையுலக நண்பர்கள் பட விநியோகம் ,வியாபாரம் சம்பந்தமாக உதயநிதியை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், கண்ணை நம்பாதே படம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சினிமா தொடர்பாக இனிமேல்  என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று தெரிவித்ததுடன்,  ரெட் ஜெயன்டில் இருந்து வெளியே வந்து விட்டேன். அதை இனிமேல் அர்ஜுன்துரை, செண்பகமூர்த்தி ஆகியோர்தான் பார்த்துக் கொள்கிறார்கள் என்று அறிவித்திருக்கிறார்.

நான் முதலமைச்சரின் மகன் என்பதால், அமைச்சராகி விட்டதாக சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், நான் திமக இளைஞர இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என பதவி வகித்துதான் இப்போது அமைச்சராகவே ஆகிவிட்டேன்.  நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் அமைச்சராக இருக்கிறேன் என்றும் சுட்டிக்காட்டினார்.